காய் கனிகளின் ஆயுளை அதிகரிக்கும் பொடி!

உலகெங்கும், தோட்டத்துக் காய்கறிகள், கனிகள் வீட்டுக்கு வருவதற்குள் 45 சதவீதம், வாடி, வதங்கி, அழுகி விடுகின்றன. விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் ஏற்படும் இந்த இழப்பை தவிர்க்க எளிமையான வழியை, 'அபீல் சயன்சஸ்' என்ற அமெரிக்க நிறுவனம் உருவாக்கிஇருக்கிறது. இந் நிறுவனத்தின் 'எடிபீல்' (Edipeel) என்ற பொடியை காய், கனிகள் மீது பூசிவிட்டால், அவை பல நாட்கள் கெடாமல் தாக்குப் பிடிப்பதாக தெரிவித்துள்ளது.

வாழைப் பழம் 10 நாட்கள் வரை, எலுமிச்சை 54 நாட்கள் வரை, மாம்பழம் 27 நாட்கள் வரை கெடாமல் இருக்கும் என்கிறது அபீல் சயன்சஸ். காய், கனிகளின் இரண்டாவது தோல் போல செயல்படும் எடிபீல், காற்றினால் ஏற்படும் ஆக்சிஜனேற்றம், நீர் ஆவியாதல் போன்றவற்றை தடுத்துவிடுவதால், அவை வாடுவதும், கெடுவதும் பல நாட்களுக்கு ஒத்திப் போடப்படுகிறது. இயற்கை விளை பொருட்கள் மீது செயற்கை வேதிப் பொருட்களை பூசுவதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பர். எனவே, எடிபீல் பொடியில் செயற்கை துளியும் இல்லை என்கிறது அபீல் சயன்சஸ்.

செடி, கொடி, இழை, தழை, பழங்களின் தோல்களை மறுசுழற்சி செய்தே எடிபீல் உருவாக்கப்பட்டுள்ளதாக அபீல் சயன்சஸ் சொல்கிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், காய்கள், பழங்களை கெடாமல் வைத்திருக்க, குளிர்ச்சியூட்டும் செலவே இல்லாமல் ஆகிவிடும்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...