பவர் பட்டன் காலியான ஐபோனில் திரையை லாக் செய்வது எப்படி.?

துரதிர்ஷ்ட வசமாக உங்கள் ஆப்பிள் ஐபோன் கருவி கீழே விழுந்தோ அல்லது விபத்துக்குள்ளாகியோ அதன் பவர் பட்டன் உடைந்து விட்டதென்றால் எப்படி உங்கள் ஐபோன் கருவியின் திரையை லாக் அலல்து அன்லாக் செய்வீர்கள்.? ஆற்றல் பொத்தான் இல்லாத நிலையில் உங்கள் ஐபோன் இயக்கமற்ற ஒரு பொருளாகிவிடும் அல்லவா.?

இது வெறும் ஒரு உதாரணம் தான் உங்களின் ஐபோன் ஆற்றல் பொத்தான் செயலிழந்து போக பல்வேறு வழிகள் உள்ளன. காரணங்கள் எதுவாகினும் அதற்கு தீர்வு ஒன்று தான். உங்களின் பவர் பட்டன் காலியான பின்பும் கூட உங்கள் ஐபோன் திரையை லாக் செய்வது எப்படி என்பதை பின்வரும் வழிமுறைகள் உங்களுக்கு கற்பிக்கும்.

  • செட்டிங்ஸ் > ஜெனரல் செல்லவும்
  • இப்பொது அக்சஸ்ஸேபிலிட்டி ஆப்ஷனை கிளிக் செய்யவும்
  • அசிஸ்டிவ் டச் என்ற ஆப்ஷன் கிடைக்கப்பெறும் வரை ஸ்க்ரோல் டவுன் செய்யவும், கிடைத்ததும் அதை கிளிக் செய்து அதனை டர்ன் ஆன் செய்யவும்.
  • இப்போது டிராக் செய்யக்கூடிய ஒரு செவ்வக பொத்தானை நீங்கள் திரையில் காண்பீர்கள், அதை கிளிக் செய்யவும்.
  • உங்கள் ஐபோன் லேட்டஸ்ட் வெர்ஷன் (எடு : ஐஓஎஸ்10) ஆக இருப்பின் டிவைஸ், கண்ட்ரோல் சென்டர், ஹோம், சிரி, கஸ்டம் அண்ட்
  • நோட்டிப்பிகேஷன்சென்டர் ஆகியவைகளை காண்பீர்கள் அதில் டிவைஸ் என்பதை கிளிக் செய்யுவும் .
  • பின்னர் கிடைக்கும் அனைத்து பிற விருப்பங்களின் மத்தியில், லாக் ஸ்க்ரீன் ஆப்ஷன் உங்களுக்கு கிடைக்கும் அது உங்கள் கருவியை லாக் செய்ய உதவும்.
  • ஒருவேளை நீங்கள் கருவியை ஆப் செய்ய வேண்டுமென்றால் லாக் ஸ்க்ரீன் ஐகானை 'ஆஃப் டூ ஸ்லைடு' தென்படும் வரை தொடர்ந்து அழுத்தவும்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...