6ஜிபி ரேம் கொண்ட சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்.!

சாம்சங் நிறுவனத்திற்கு இந்த 2017-ஆம் ஆண்டு எவ்வளவு முக்கியமான ஆண்டு என்பதை நாம் அறிவோம். சாம்சங் கருவிகளில் சிறிய தவறு நிகழ்ந்தாலும் கூட அதை காட்டுத்தீ போல ஊதி பெரிதாக்க அனைவரும் தயாராக உள்ளன. இதையெல்லாம் தெளிவாக புரிந்துகொண்டு செயல்படும் சாம்சங் நிறுவனம் தனது பிராண்ட் பெயரை மீண்டும் ஸ்மார்ட்போன் சந்தையில் நிலைநிறுத்த 2017-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே அதன் கருவிகளை வெளியிடத் தொடங்கிவிட்டது. மலிவு விலை ஸ்மார்ட்போன்களில் சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கும் சாம்சங் கேலக்ஸி ஜே தொடரில் கேலக்ஸி ஜே2 ஏஸ் மற்றும் கேலக்ஸி ஜே1 4ஜி ஆகிய கருவிகளை சமீபத்தில் சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து இப்போது சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ கருவியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இக்கருவியின் விலை என்ன.? அம்சங்கள் என்னென்ன என்பதை பற்றிய விவரங்களை கொண்ட தொகுப்பே இது

ப்ரீ-புக்கிங்: சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ கருவியானது கருப்பு மற்றும் தங்கம் என இரண்டு நிறங்களில் கிடைக்கும். தென் கொரிய உற்பத்தி நிறுவனமான சாம்சங், ப்ரீ-புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 12 மாதங்களுக்கு ஒருமுறை ஸ்க்ரீன் மாற்றம் நிகழ்த்தி கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

விலை:
செவ்வாய்க்கிழமையன்று (நேற்று) சாம்சங் இந்தியா புவனேஸ்வரில் கேலக்ஸி சி9 ப்ரோ அக்கருவியை வெளியிட்டது. இக்கருவியை ஜனவரி 27-ல் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் பெறலாம் மற்றும் ஆன்லைன் தளங்களில் முன் பதிவு செய்யலாம். பிப்ரவரி 2017-ம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து இக்கருவி அனைத்து சில்லறை சேனல்களிலும் ரூ.39,000/- என்ற விலைக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்ப்ளே: இரட்டை சிம் (நானோ + நானோ) 4ஜி ஆதரவு கொண்டுள்ள கேலக்ஸி சி9 ப்ரோ கருவியானது பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயங்குதளம் கொண்டுள்ளது மற்றும் ஒரு 6 அங்குல முழு எச்டி (1080x1920) அமோஎல்இடி டிஸ்ப்ளே மற்றும் 1.95 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் உடனான ஒரு ஆக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 653 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

கேமிரா: கேமிரா துறையை பொருத்தமட்டில் கேலக்ஸி சி9 ப்ரோ முன்பக்கம் மற்றும் பின்பக்கம் இரண்டிலும் ஒரு 16 மெகாபிக்சல் கேமிரா கொண்டுள்ளது. பின்புற 16-மெகாபிக்சல் கேமரா எப்/1.9 அப்பெர்ஷர் மற்றும் ஒரு இரட்டை எல்இடி ப்ளாஷ் கொண்டு வருகிறது. செல்பீ கேமிரா அதே அப்பெர்ஷர் மற்றும் ப்ளாஷ் தொகுதி கொண்டுள்ளது.

பேட்டரி: இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக நீட்டிப்பு வசதி (256ஜிபி வரை) கொண்ட 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு கொண்டுள்ளது. உடன் கேலக்ஸி சி9 ப்ரோ அதன் ஹாம் பட்டனில் ஏற்றப்பட்ட ஒரு கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ளது மற்றும் இந்த ஸ்மார்ட்போன் வேகமாக சார்ஜ் ஆதரவு கொண்ட ஒரு 4000எம்ஏஎச் பேட்டரி உள்ளடக்கியுள்ளது.

இணைப்பு விருப்பம்: கருவியின் இணைப்பு விருப்பங்களை பொருத்தமட்டில் 4ஜி, எல்டிஇ,ப்ளூடூத் வி4.2, வைஃபை, ஜிபிஎஸ், க்ளோனாஸ், பெய்டோ, என்எப்சி, யுஎஸ்பி டைப் சி, ஆகியவைகளை கொண்டுள்ளது மற்றும் ஒரு 3.5 மிமீ ஆடியோ ஜாக் உடன் அளவீடுகளில் 162.9x80.7x6.9எம்எம், 189 கிராம் எடையுடையது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...