அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி

அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட அக்னி-4 ஏவுகணை, ஒடிஸா மாநிலம், அப்துல் கலாம் தீவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து திங்கள்கிழமை வெற்றிகரகமாக பரிசோதிக்கப்பட்டது.
17 டன் எடையுடன் 20 மீட்டர் நீளத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த ஏவுகணை, 4,000 கி.மீ. வரை பாயந்து சென்று இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, அது தயாரிக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றியிருக்கிறது என்றும், இந்தப் பரிசோதனை வெற்றிகரமாக அமைந்தது என்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி - மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) வட்டாரங்கள் தெரிவித்தன.
அக்னி-4 ஏவுகணை பரிசோதிக்கப்படுவது, இது, 6-ஆவது முறையாகும். இதற்கு முன், இந்த ஏவுகணையை இந்திய ராணுவம் கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி வெற்றிகரமாக பரிசோதித்தது.
தரையில் இருந்து தரையில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் வகையில், நம்பகமான தொழில்நுட்பத்துடனும், அதிநவீன, எளிய மின்னணு உபகரணங்களுடனும் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏவுகணையில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், தாமாகவே சரிசெய்துகொள்ளும் வகையில், அதிநவீன கணினி மென்பொருள்களுடன் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று டிஆர்டிஓ வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கு முன்பு, இந்த ஏவுதளத்தில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ஏவுகணை, கடந்த மாதம் 26-ஆம் தேதி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...