ஆண்ட்ராய்டு போன் பயனாளிகளுக்கு கூகுள் தரும் 3 பயனுள்ள வசதிகள்

ஆண்ட்ராய்டு போன்களின் உபயோகம் அதிகரித்து வரும் நிலையில் இதுவரை கம்ப்யூட்டர்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த கூகுள் நிறுவனம் தற்போது ஆண்ட்ராய்ட் போன்களுக்கான வசதிகளையும் அதிகரித்து வருகிறது.

உதாரணமாக ஒரே ஒரு கூகுள் அக்கவுண்ட் இருந்தால் போதும், நீங்கள் ஆண்ட்ராய்டு போன்கள் மூலம் நீங்கள் டிராக் செய்ய வேண்டிய அனைத்து டேட்டாகளையும் கலெக்ட் செய்து உங்களுக்கு தரும் சேவையில் கூகுள் ஈடுபட்டு வருகிறது. ஒரு ஆண்ட்ராய்ட் போனின் உபயோகம் இதன் காரணமாக அதிகரித்து வருகிறது.

ஆண்ட்ராய்ட் போன்களுக்காக கூகுள் அளித்துள்ள பல வசதிகளை இன்னும் பயனாளிகள் அறிந்து கொள்ளவில்லை என்றே கூற வேண்டும். இந்த கட்டுரையில் கூகுள் அளித்துள்ள ஒருசில வசதிகள் குறித்து விரிவாக பார்ப்போம்

குறிப்பிட்ட லொகேஷனை ஞாபகப்படுத்த வேண்டுமா?

உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட லொகேஷனை குறிப்பிட்ட நேரத்தில் ஞாபகப்படுத்த வேண்டுமா? கவலையே வேண்டாம். உங்கள் பர்சனல் அசிஸ்டெண்ட் போலவே இந்த பணியை கூகுள் செய்துவிடும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒரு சுலபமான வேலைதான். கூகுள் சியர்ச் பாரில் உள்ள மைக்ரோபோன் போன்று உள்ள ஐகானை க்ளிக் செய்து, அதில் உங்களுக்கு தேவையான லொகேஷனை ஞாபகப்படுத்த பதிவு செய்துவிட்டால் போதும், உங்கள் வேலையை கூகுள் சுலபமாக்கிவிடும்

கூகுளில் இருந்து ஆப்ஸ்களை நேரடியாக ஓப்பன் செய்து கொள்ளலாம்

ஒருசிலர் தங்கள் ஆண்ட்ராய்டு போன்களை ஏகப்பட்ட ஆப்ஸ்களை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்திருப்பார்கள். அந்த நேரத்தில் அவசரமாக ஒரு ஆப்-ஐ ஓப்பன் செய்ய வேண்டும் என்றால் அந்த ஆப் எங்கே இருக்கின்றது என்பதை தேட வேண்டும்

அதை தேடி கண்டுபிடிக்க ஒருசில வினாடிகளோ அல்லது நிமிடங்களோ ஆகலாம். ஆனால் கூகுள் இதற்கொரு வசதியை செய்து கொடுத்துள்ளது. இந்த வசதியின் மூலம் உங்களுக்கு தேவையான ஆப் மின்னல் வேகத்தில் ஓப்பன் ஆகிவிடும்.

உங்கள் ஆண்ட்ராய்டு போனில் உள்ள ஹோம் ஸ்க்ரீன் சென்றும், உங்களுக்கு தேவையான ஆப்-ஐ ஓப்பன் செய்ய வேண்டும் என்று நீங்கள் ஒரு குரல் கொடுத்தால் போதும். உதாரணமாக வாட்ஸ் அப்-ஐ ஓப்பன் செய்ய வேண்டும், ஃபேஸ்புக்கை ஓபன் செய்ய வேண்டும் என்று நீங்கள் ஒரு குரல் கொடுத்தால் போதும், உடனே அந்த ஆப் ஓபன் ஆகி உங்கள் தேடுதல் வேலையை எளிமையாக்கி விடும்

உங்கள் டிராவல் மேனேஜராகவும் செயல்படும்

நீங்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் அந்த நிகழ்ச்சியை உங்கள் மனதில் ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும். ஒருவேளை மறதி காரணமாக அந்த நிகழ்ச்சியை மிஸ் செய்துவிட்டால் உங்களுக்கு இழப்பு கூட நேரிடலாம். இதை தவிர்க்க கூகுள் காலண்டரில் உங்கள் நிகழ்ச்சியை பதிவு செய்து கொண்டால் போதும்.

உதாரணமாக ஒரு குறிப்பிட்ட தேதியில் நடக்கும் பார்ட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் அந்த தேதி மற்றும் நேரத்தை கூகுள் காலண்டரில் பதிவு செய்துவிட்டால், மிகச்சரியாக உங்களுக்கு கூகுள் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் நோட்டிபிகேஷன் மூலம் ஞாபகப்படுத்தி உங்களுடைய டிராவல் மேனேஜராகவும் பணிபுரியும்

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...