வீட்டை ஆளும் 'ஜார்விஸ்' மார்க் ஜுக்கர்பர்க் அசத்தல்!

பேஸ்புக்'கின் அதிபர் மார்க் ஜுக்கர்பர்க், 2016ம் ஆண்டு துவக்கத்தில் தன் வீட்டிலுள்ள எல்லா சாதனங்களையும் இயக்கும், 'ஆர்டிபீஷியல் இன்டெலிஜன்ஸ்' எனப்படும், செயற்கை நுண்ணறிவு அமைப்பை உருவாக்கும் சவாலை எடுத்துக் கொள்வதாக அறிவித்தார்.

அதேபோல, 2016 டிசம்பர் முடியும் தருவாயில் தன் வீட்டை இயக்கும் 'ஜார்விஸ்' என்ற செயற்கை நுண்ணறிவு அமைப்பை உருவாக்கியிருப்பதாக, மார்க் தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். வீட்டு வாசலில் நண்பர்கள் நின்றால், ஜார்விஸ் அதை கேமரா வழியே பார்த்து, கதவைத் திறந்துவிடுகிறது. 'எனக்குப் பிடித்த பாடல்களை போடு' என்றதும், ஜார்விஸ் அதை புரிந்துகொண்டு, இசை சாதனங்களை முடுக்கி, பாடல்களை போடுகிறது. 'ஏசி'யின் குளிர்ச்சியை கூட்டுகிறது. அவரது மகள் மேக்ஸ் வீட்டில் இருந்தால், அவளோடு பேச்சுக் கொடுக்கிறது. மார்க், தன் மொபைல் வழியே விளக்கை அணைக்கவும், போடவும் உத்தரவிட்டால், ஜார்விஸ் அதை உடனே செய்கிறது.

இப்படி குரல், கண், மற்றும் மொழி அறிவு, வீட்டிலுள்ள அனைத்து சாதனங்களையும் இயக்கும் திறன் ஆகியவற்றை ஜார்விசுக்குத் தருவதற்கு, மொத்தம், 100 மணிநேரம் செலவிட்டதாக மார்க் தெரிவித்திருக்கிறார். அயர்ன் மேன் படத்தில் வரும், செயற்கை நுண்ணறிவு சாதனத்தின் ஜார்விஸ் என்ற பெயரை தன் படைப்புக்கும் சூட்டியிருக்கிறார் மார்க்.

ஏற்கனவே பிரபலமாக உள்ள 'பைதான், பி.எச்.பி.', மற்றும் 'அப்ஜெக்டிவ் சி' ஆகிய பிரபல மென்பொருள்களை வைத்தே ஜார்விசை உருவாக்கியிருக்கிறார். இந்த சவால் மூலம் செயற்கை நுண்ணறிவின் பல புதிய அம்சங்களை கற்றதாகவும், தன் நிறுவனம் இதேபோன்ற ஒரு மென்பொருளை வெளியிடக்கூடும் என்றும் மார்க் தெரிவித்திருக்கிறார்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...