விலைகுறையும் ஆப்பிள் ஐபோன்கள்

ஐபோன்களை இந்தியாவில் தயாரிப்பது குறித்து மத்திய அரசிடம் ஆப்பிள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாகக் கருதப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் முக்கியமான தயாரிப்புகளில் ஒன்று ஐபோன். இளைஞர்களின் அடையாளமாக மாறிவிட்ட ஐபோன்கள், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவுக்கு தற்போது இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்திய ஸ்மார்ட்போன் சந்தை அமெரிக்காவை முந்தி உலக அளவில் இரண்டாவது மிகப்பெரிய சந்தை என்ற பெருமையை அடுத்தாண்டு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம், தனது உற்பத்தித் தொழிற்சாலையை இந்தியாவில் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபோன் உள்ளிட்ட ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்கள் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படும் போது அவற்றின் விலை 5 முதல் 10 சதவீதம் அளவுக்கு குறைய வாய்ப்புள்ளதாக சந்தை வல்லுனர்கள் கணித்துள்ளனர். இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான ஐபோன் 7 மாடலின் விலை இந்தியாவில் ரூ.52,000 முதல் ரூ.92,000 வரையில் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...