பேச்சை மொழிபெயர்க்கும் மெகாபோன்!

மொழிபெயர்ப்பு என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஆனால், துல்லியமாக மொழிபெயர்க்கும் தரமான கருவிகள் இன்னும் உருவாக்கப்படவே இல்லை. தற்போது அந்தக் கவலைக்கு தீர்வுகாண வந்திருக்கிறது மெகாபோன்.

ஜப்பானின் பேனாஸோனிக் கார்ப்பரேஷன் உருவாக்கி உள்ள புதிய மெகாபோன், பேசும் குரலை ஆங்கிலம், சீனம், கொரியா என பல மொழிகளில் இன்ஸ்டன்டாக மொழிபெயர்க்கிறது. 10 ஆயிரம் மெகாபோன்களை முதல்கட்டமாக தயாரித்துள்ள பேனாஸோனிக் நிறுவனம், அதனை 2018 ஆம் ஆண்டு சந்தைக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. ‘படிகளை கவனியுங்கள்’, ‘ரயில் தாமதமாக வருகிறது’ உள்ளிட்ட 300 ப்ரீசெட் வார்த்தைகளை துல்லியமாக 3 மொழிகளில் ஆட்டோமேடிக்காக மொழிபெயர்க்கும் திறன் கொண்டது இந்த மெகாபோன். இதனை விமானநிலையங்கள், ரயில்வே நிலையங்கள், சுற்றுலாத்தலங்கள் ஆகிய மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பயன்படுத்தலாம் என பேனாஸோனிக் நிறுவனம் கூறுகிறது.

முன்பே பதிவு செய்த வார்த்தைகளை வேகமாக இந்த மெகாபோன் மொழிபெயர்ப்பதால் ஜப்பானுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு உதவும் வகையில் இதனைப் பயன்படுத்தலாம். குரலை அடையாளமறிதல், இரைச்சல் குறைத்தல் உள்ளிட்ட அம்சங்கள் இருப்பது பிளஸ் பாயிண்ட்.

சரி, இந்த 300 வார்த்தைகளைத் தாண்டி மொழிபெயர்க்க என்ன செய்வது?

இணையத்தில் இணைந்து இதனை அப்டேட் செய்துகொள்ளவும் நிறுவனம் உதவுகிறது. பேனாஸோனிக் நிறுவனம் இந்த மெகாபோனை சந்தா அடிப்படையில் மட்டுமே விற்கிறது. மெகாபோனை 3 ஆண்டு ஒப்பந்தத்தில் பயன்படுத்த வாடகை மாதம் 12,737 ரூபாய் வசூலிக்கிறது. மெகாபோனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சர்வீஸ் உள்ளிட்ட சேவைகளையும் பேனாஸோனிக் நிறுவனமே அளிக்கிறது.

இந்த மெகாபோன் ஜப்பானிலுள்ள போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் காவல்துறை உள்ளிட்ட அமைப்புகளிடம் கொடுக்கப்பட்டு வெற்றி கரமாக சோதிக்கப்பட்டுள்ளது. ஆண்டிற்கு 45 மில்லியன் டாலர்களை சுற்றுலாவின் மூலம் பெற்று வரும் ஜப்பான் நாட்டின் சுற்றுலாத் துறைக்கு இந்த மொழி பெயர்ப்பு மெகாபோன் உதவும் என நம்பப்படுகிறது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...