இப்போதே 'டெலிட்' செய்ய வேண்டிய 4 ஆப்ஸ் - அரசாங்கம் வேண்டுகோள்.!

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மத்திய உள்துறை அமைச்சகம் ஓர் எச்சரிக்கையை விடுத்தது. அதாவது பாகிஸ்தானிய முகவர்கள் சில போன் பயன்பாடுகள் (ஆப்ஸ்) மூலம் தீம்பொருள்களை (மால்வேர்) அனுப்புவதன் மூலம் இந்தியர்களை உளவு பார்க்கிறார்கள் என்று தெரிவித்திருந்தது. இந்த மால்வேர்கள் ஆனது பயனர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு ஒரு தீவிர அச்சுறுத்தலாய் திகழ்வதாகவும், அதாவது ஆப்ஸ்களில்/ ஆப்களின் மூலம் பதிவிடப்பட்டுள்ள தனிப்பட்ட தகவல்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்திய உள்துறை அமைச்சகம் இந்தியர்கள் குறிப்பிட்ட 4 ஆப்ஸ்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. அந்த நான்கு ஆப்ஸ்கள் என்னென்ன..? இதன் பின்னணி என்ன.?

நான்கு பயன்பாடுகள் உளவு பார்ப்பதாக சந்தேகம் என்ற கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நான்கு பயன்பாடுகள் இவைகள் தான் - டாப் கன் (Top Gun) என்றவொரு கேமிங் ஆப், எம்பிஜூன்கீ (Mpjunkie) என்ற ம்யூசிக் ஆப், பிடிஜூன்கீ (Bdjunkie) என்ற ஒரு வீடியோ ஆப் மற்றும் டால்க்கிங் ப்ராக் (Talking Frog) என்றவொரு பொழுதுபோக்கு ஆப் ஆகியவைகளாகும்.

பாகிஸ்தான் முகவர்கள் கூறப்பட்டுள்ள தகவலின்படி பாகிஸ்தான் முகவர்கள் இந்தியர்களின் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் முக்கியமான தகவல்களை திருட இந்த பயன்பாடுகள் விநியோகிக்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.

திருடிக்கொள்ளும் இந்த ஹேக்கர்கள் பொதுவாக மொபைல் கட்டண விவரம் உட்பட ஸ்மார்ட்போன்களில் உள்ளீடப்பட்டுள்ள அல்லது அல்லது சேமித்து வைத்திருக்கும் எந்தவொரு விவரத்தையும் திருடிக்கொள்ளும், முக்கியமாக இந்தியாவில் பணபரிவர்தனைகள் ஆன்லைனில் நடக்கும் இத்தருணத்தில்.!

கூகுள் ப்ளே ஸ்டோர் இதே போன்ற ஒரு சம்பவம் இந்த ஆண்டு முன்னதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய ராணுவத்தை உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உத்தியோகபூர்வ கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து ஸ்மேஷ்ஆப் (SmeshApp) என்ற ஒரு பயன்பாடு நீக்கப்பட்டது.

இணைய மோசடி தகவலின்படி, இந்திய ராணுவ துருப்புக்கள் இயக்கம் மீது ஒரு கண் வைத்திருக்கவும் மற்றும் இந்திய ராணுவத்தின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடர்பான முக்கிய தகவல்களை திருட பாக்கிஸ்தானிய முகவர் அந்த ஆப்பை பயன்படுத்தியுள்ளது. விசாரணையில் இந்த இணைய மோசடிக்கு பின்னால் இண்டர் சர்வீசஸ் இன்டெலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) ஈடுபட்டிருப்பது வெளிப்படையாக தெரிய வந்தது. இந்த ஆப் மூலம் இராணுவம் தகவல் சம்பந்தப்பட்ட ஒருவரின் இயக்கங்கள், தொலைபேசி அழைப்புகள், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவைகளை திருட முடியும்.

ஜெர்மனி சர்வரில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் ஜெர்மனியில் அமைந்துள்ள ஒரு இடத்திலுள்ள சர்வரில் கராச்சியை அடிப்படையாக கொண்ட ஒரு அடையாளம் தெரியாத நபரால் சேமித்து வைக்கப்பட்டிருந்தது என்பதும், அதிர்ச்சியளிக்கும் வண்ணம் பதன்கோட் தாக்குதலின் போது பாகிஸ்தானிய முகவர்கள் இந்த ஆப்பை பெரிதளவில் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டது. மேலும் தகவலின்படி, இந்திய கப்பல் படை மற்றும் விமான படையை குறிவைத்து தான் இந்த ஆப் களம் இறக்கப்பட்டுள்ளது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...