பேஸ்புக் அப்டேட் : எச்டி வீடியோ அப்லோட், ஆப்லைன் வீடியோ மற்றும் பல.!

ஒருவழியாக பேஸ்புக், அப்டேட் செய்துள்ளது. குறிப்பாக அதன் ஆண்ட்ராய்டு பயன்பாட்டில் பல புதிய அம்சங்களை சேர்ப்பதன் மூலம் அதன் பயனர்கள் மேம்பட்ட அனுபவத்தை உணர பேஸ்புக் வழிவகுத்துள்ளது.

இந்த மேம்பாட்டின் மூலம் ஆண்ட்ராய்டு பயனர்கள் இப்போது, எச்டி தர வீடியோவை பதிவேற்ற முடியும், பிஐபி (PIP) வீடியோக்களை பதிவு செய்ய முடியும், ஆஃப்லைனில் வீடியோக்களை பார்க்க முடியும் மற்றும் இன்னும் நிறைய நிகழ்த்த முடியும். அனைத்தையும் விரிவாக பார்க்கலாம்.

சமீபத்தில், பேஸ்புக் அதன் பயன்பாட்டில் பல புதிய அம்சங்களான இரகசிய உரையாடல்கள், எண்ட் டூ என்ற என்க்ரிப்ஷன், தளத்தில் உள்ள போலி செய்திகளை நீக்குதல், புதிய கவர்ச்சிகரமான ஈமோஜிகள் மற்றும் பல மேம்படுத்தல்களை வழங்கியது. இப்போது அதன் டிசம்பர் மேம்படுத்தலில், ஆண்ட்ராய்டு செபயனர்களுக்கான சில சுவாரசியமான அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன. ஐஓஎஸ் பயனர்கள் போன்றே இப்போது ஆண்ட்ராய்டு பயனர்கள் எச்டி தர வீடியோக்களை பதிவேற்ற முடியும் மற்றும் எந்த நேர கட்டுப்பாடும் இல்லாத எச்டி வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் திறனையும் பேஸ்புக் கொடுத்திருக்கிறது. இதை நிகழ்த்த எந்த குறுக்கீடும் யில்லாத ஒரு நல்ல இணைய இணைப்பு கட்டாயமாகும்.

இன்று வரையிலாக ஆண்ட்ராய்டு பேஸ்புக் ஆப் ஆனது எச்டி புகைப்படங்களை அப்லோட் செய்ய அனுமதிக்கிறது ஆனால் ஐஓஎஸ் ஆப் போன்று எச்டி தர விடீயோக்களை பதிவேற்ற அனுமதி வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனுடன் சேர்த்து, பேஸ்புக் பிக்சர்-இன்- பிக்சர் வீடியோக்களையும் அதன் ஆண்ட்ராய்டுஆப்பில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. யூட்யூப் மற்றும் நெட்ப்ளிக்ஸ் அடிச்சுவடுகளை தொடர்ந்து, பேஸ்புக் இப்போது பயனர்கள் இணைய இணைப்பு இல்லாமல் வீடியோக்களை பார்த்து அனுபவிக்கும் ஆப்லைன் வீடியோ அம்சம் சார்ந்த வேளையில் ஈடுபட்டு வருகிறது. ஆம், விரைவில் பயனர்கள் தங்கள் அபிமான தொடரை ஆஃப்லைனில் காணலாம், இது சமீபத்தில் தொடங்கப்பட்ட நெட்ஃபிக்ஸ் ஆஃப்லைன் வீடியோ பதிவிறக்க அம்சத்தை போன்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற அம்சங்களுக்காக தான் பேஸ்புக் பயனர்கள் ஆண்டுகளாக காத்திருந்தனர் இறுதியாக இப்போது கிடைக்கப்பெற்றுள்ளது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...