இதயத்துக்கு ஒரு 'பிளாஸ்திரி'

மாரடைப்பு வந்தவர்களுக்கு, இதயத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி காயமடைந்து, செயல்படாமலேயே இருக்கும். இதயத்தின் மற்ற பகுதி செயல்பட்டு, ஒரு பகுதி செயல்படாமல் இருப்பது, இதயத் துடிப்பின் லயத்தை பாதிப்பதோடு, காலப்போக்கில், 'அரித்மியா' போன்ற குறைபாடுகள் வரலாம். இதயத்தின் செயல்படாத பகுதியை செயல்பட வைக்க, இங்கிலாந்தின் இம்ப்பீரியல் கல்லுாரி மற்றும் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு பிளாஸ்திரியை கண்டுபிடித்திருக்கின்றனர். கடல் வாழ் இறால் வகை ஒன்றின் ஓட்டிலிருந்து எடுக்கப்பட்ட, 'சிடோசான்', 'பாலிஅனிலின்' என்ற மின்சாரத்தை கடத்தும் திறனுள்ள பாலிமர் மற்றும் தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட, 'பைடிக்' அமிலம் ஆகிய பொருட்களை கலந்து, இந்த இதயத்திற்கான பிளாஸ்திரியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்கின்றனர்.

இதயம் துடிப்பது, இதயமே உற்பத்தி செய்யும் சிறிய அளவினாலான மின்சாரத்தால் தான். எனவே, இந்த பிளாஸ்திரியை இதயத்தின் பாதிக்கப்பட்ட இடத்தில் ஒட்டும்போது, மற்ற பகுதியிலிருந்து அப்பகுதிக்கும் மின்சாரம் கிடைத்து துடிப்பு உருவாகிறது. இந்த பிளாஸ்திரி இதயத்தின் தசைகளோடு கலந்துவிடாது என்றும், இதை தையல் போட்டு ஒட்டவேண்டியதில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதயத்தின் மீது பிளாஸ்திரியை வைத்து, பச்சை நிற லேசர் கதிர்கள் மூலம் லேசாக பொசுக்கினால் அது ஒட்டிக்கொள்ளும்.

எலிகள் மீது இந்த பிளாஸ்திரி வெற்றிகரமாக வேலை செய்வதாகவும், விரைவில் மனித இதயத்தின் மீது சோதனைகள் துவங்கவிருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இக்கண்டுபிடிப்பு, 'சயன்ஸ் அட்வான்சஸ்' இதழில் வெளியாகி உள்ளது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...