செவ்வாயில் 2030ல் குடியேற்றம்

மனிதர்கள், 2030 வாக்கில் செவ்வாய் கிரகத்தில், வசிக்க ஆரம்பிப்பர் என அமெரிக்க விண்வெளி அமைப்பான, 'நாசா' அறிவித்துள்ளது. அப்போது பூமியிலிருந்து அவர்கள் எதையும் எதிர்பார்க்கும் அவசியம் இருக்காது.அண்மையில் வெளியிட்ட விண்வெளி திட்டத்தின்படி, செவ்வாயில் சகல வசதிகளையும் கொண்ட குடியிருப்புகளை நாசா உருவாக்கவிருக்கிறது.

நிலாவுக்கு மனிதனை அனுப்பி, திரும்பவும் பூமிக்கு கொண்டு வந்ததற்கு இணையான சவால் மிக்கதாக, செவ்வாய் பயணம் இருக்கும் என நாசா தெரிவித்துள்ளது. ஆனால், செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் மனிதர்கள், அங்கேயே குடியிருக்க ஆரம்பிப்பர் என்கிறது நாசா.“ஒட்டுமொத்த மனித குலத்திற்காக எப்படி நிலவுப் பயணத்தை மேற்கொண்டோமோ, அதே போல செவ்வாய் பயணத்தையும் நாங்கள் மேற்கொள்ள இருக்கிறோம்,” என நாசா தெரிவித்துள்ளது. அண்மையில், விண் இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கும், மனித குலம் நீடிக்க, வேறு கிரகத்திற்கு குடியேறுவது அவசியம் என்று சொல்லியிருக்கிறார். பருவநிலை மாற்றம், அணு ஆயுதப் போர் போன்றவற்றால் மனித குலம் அழியும் என அவர் தெரிவித்தார்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...