லாபமான தூய்மை தொழில்நுட்பம்!

சூரிய சக்தியை மட்டுமே பயன்படுத்தி, உலகம் முழுவதும் வெற்றிகரமாகப் பறந்து, 2016ல் சாதனை புரிந்த, 'சோலார் இம்பல்ஸ் 2' இந்த பயணத்துக்கு ஆதாரமாக இருந்த சோலார் இம்பல்ஸ் அறக்கட்டளையினர், தங்கள் பணி இத்தோடு முடிவடையவில்லை என்கின்றனர். சுற்றுச்சூழலை மாசு படுத்தாத ஒரு தொழில்நுட்பத்தால் சாதிக்க முடியும் என்று காட்டிய பின், அதே போன்ற 'துாய தொழில்நுட்பங்களை' ஊக்குவிக்க அந்த அறக்கட்டளையினர் முடிவெடுத்துஉள்ளனர்.

அண்மையில், மொராக்கோவின் மராகெச் நகரில் நடந்த, 22வது பல தரப்பு ஐக்கிய நாடுகள் கூட்டத்தை ஒட்டி, 'துாய தொழில்நுட்பங்களுக்கான உலககூட்டமைப்பு' ஒன்றை சோலார் இம்பல்ஸ் அறக்கட்டளை துவங்கியுள்ளது. உலகெங்கும் துாய தொழில்நுட்பங்களைக் உருவாக்கும் தொழில்முனைவோர், ஆராய்ச்சியாளர்கள், புத்திளம் நிறுவனங்கள் இந்த கூட்டமைப்பில் உறுப்பினர் ஆகலாம்.

''துாய தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பது, அவற்றை உருவாக்குவோர், பயன்படுத்துவோருக்கிடையே கிரியா ஊக்கியாக செயல்படுவது,'' இந்த அமைப்பின் நோக்கமாக இருக்கும். துாய தொழில்நுட்பங்களின் மூலம் லாபமும் வேலை வாய்ப்பும் ஏற்படுத்த முடியும் என்ற செய்தியை பரப்புரைகள் மூலம் உலகெங்கும் கொண்டு செல்ல முடியும் என்று கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அறிவித்து உள்ளனர்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...