பெர்சனல் அசிஸ்டெண்ட் போல் உதவும் கூகுள் அசிஸ்டெண்ட் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?

உங்களுக்கு ஒரு பர்சனல் அசிஸ்டெண்ட் வேண்டுமா? அதற்கென ஒரு ஆளை நியமனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கும் ஒரு டெக்னாலஜி வந்துவிட்டது. ஆம் நீங்கள் கூகுள் பிக்சல் மற்றும் பிக்சல் XL, மொபைலை வாங்கிவிட்டால் போதும் நீங்கள் ஒரு பெர்சனல் அசிஸ்டெண்ட்டையும் அப்பாயிண்ட்மெண்ட் செய்ததற்கு சமம் ஆகும்.

இந்த போன்கள் முதல் ஆண்ட்ராய்டு 7./0 என்ற பெருமையை மட்டுமின்றி மனிதர்களுக்கு உதவும் பெர்சனல் அசிஸ்டெண்ட் ஆகவும் உள்ளது.

நீங்கள் ஏற்கனவே கூகுள் அலோ அப்ளிகேசனை பயன்படுத்தி இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு 'கூகுள் அசிஸ்டெண்ட்' அப்ளிகேசனை பயன்படுத்த மிக எளிதாக இருக்கும். 'ஓகே கூகுள்' என்ற ஒரே வார்த்தையை கூறுவதன் மூலம் நீங்கள் இட்ட கட்டளையை ஒரு வேலைக்காரனை போல செய்ய காத்திருக்கும் வகையில் இந்த போனின் ஓஎஸ் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அப்ளிகேசனை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து தற்போது பார்ப்போம்

உங்களுக்கு ஜோக் வேண்டுமா?

நாள் முழுவதும் டென்சனாக வேலை பார்த்துவிட்டு ரிலாக்ஸ் ஆக கவுண்டமணி-செந்தில் காமெடி பார்ப்பவர்கள், ஏதாவது ஜோக் கேட்க விரும்பினால் கூகுள் அசிஸ்டெண்ட் அப்ளிகேசனை ஆன் செய்துவிட்டு ஜோக் வேண்டும் என்று கூறினால் போதும், பலவகையான ஜோக்குகள் உங்களை சிரிப்பில் திணறடிக்கும்

வீடியோ அல்லது இசை வேண்டுமா? அதுவும் கிடைக்கும்

தூங்குவதற்கு முன்போ அல்லது ஓய்வு நேரத்திலோ நீங்கள் இனிமையான இசையமை ரசிக்கும் நபராக இருந்தால், கூகுள் அசிஸ்டெண்ட் இடம் இசை வேண்டும் அல்லது வீடியோ வேண்டும் என்று கூறினால் போதும், உங்கள் போனில் வைக்கப்பட்டுள்ள இசை ஒலிக்கும்

பசிக்குது, சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா?

நீங்கள் பயணம் செய்து கொண்டிருக்கும்போதோ, அல்லது புதிய இடத்திற்கு சென்று கொண்டிருக்கும்போதே, சாப்பிட வேண்டும் என்றால் கூகுள் அசிஸ்டெண்ட் இடம் சொன்னால் போதும், உடனே கூகுள் மேப்பில் அருகில் உள்ள தரமான, நல்ல ரெஸ்டாரெண்டுகள் குறித்த தகவல் உங்கள் மொபைல் போனின் ஸ்க்ரீனில் தோன்றும்.

இசையுலகில் மூழ்க வேண்டுமா?

ஆப்பிள் ஐபோனில் உள்ள சிறி ஆப் போலவே இந்த கூகுள் அசிஸ்டெண்ட்-ம் நீங்கள் குறிப்பிட்ட, விரும்பிய பாடலை விருப்பமான நேரத்தில் ஒலிக்க வைத்து உங்களை இசைக்கடலில் மூழ்க வைக்கும்

குறிப்பிட்ட நம்பரை ஞாபகம் வைக்க வேண்டுமா?

நீங்கள் உபயோகப்படுத்திவிட்டு மறந்துபோன அல்லது தூக்கி போட்டுவிட்ட எண் மீண்டும் உங்களுக்கு தேவைப்படுகிறதா, கவலையே வேண்டாம், கூகுள் அசிஸ்டெண்ட் உங்களுக்கு உதவி செய்வார்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...