பயனாளிகளுக்கு வாட்ஸ் அப் தரும் அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்கள்

இன்றைய உலகில் வாட்ஸ் என்பது மனிதனின் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப், வெறும் நண்பர்களிடம் à®…ரட்டைக்கு மட்டும் பயன்படுவதில்லை. பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு தகவல் அனுப்ப, ஒரு முக்கிய செய்தியை பகிர்ந்து கொள்ள என டெக்னாலஜியை சரியாக பயன்படுத்த தொடங்கிவிட்டன.

சமீபத்தில் வாட்ஸ் அப் கொடுத்த வீடியோ அழைப்பு வசதி, பயனாளிக்கு பெரும் உதவியாக உள்ளது. தங்கள் உணர்வுகளையும், தகவல்களையும் முகத்தை பார்த்தே பகிர்ந்து கொள்ளும் வசதி கிடைத்துள்ளதால் ஒவ்வொரு வாட்ஸ் அப் பயனாளியும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வாட்ஸ் அப் தனது பயனாளிகளுக்கு எந்த அளவுக்கு வசதிகளை அதிகரித்து வருகிறதோ அதே அளவுக்கு பாதுகாப்பினையும் அதிகரித்து உள்ளது. இதற்கெனவே தொழில்நுட்ப வல்லுனர்கள் பலவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

 à®¤à®±à¯à®ªà¯‹à®¤à¯ அதிக பாதுகாப்பு வசதிகளுடன் வாட்ஸ் அப்

பயனாளிகள் அனுப்பும் மெசேஜ்களை பாதுகாக்க வாட்ஸ் அப் அவ்வப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப் இரண்டு நண்பர்கள் தகவல்கள் ப|றிமாறிக் கொள்கின்றனர் என்றால் அந்த இருவரின் பரிமாற்றங்கள் மூன்றாவது நபருக்கு தெரியாத வண்ணம் அங்கீகார பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் வாட்ஸ் அப் பயனாளிகளின் கணக்குகளும், அவர்கள் அனுப்பும் தகவல்களும் பாதுகாப்பு அடைகின்றன

இரு நபர்களுக்கிடையேயான பரிமாற்றம்

வாட்ஸ் அப் நண்பர்கள் இரண்டு பேர்களுக்கு இடையேயான பரிமாற்றங்கள் எந்த காரணத்தை முன்னிட்டும் வெளியே தெரியாத வகையில் இரு காரணி அங்கீகார முறை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த இரு காரணி அங்கீகார நடைமுறைக்கு பின்னர் வாட்ஸ் அப் பயனாளிக்கு பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

பயனாளிகளின் பாதுகாப்புக்கு வாட்ஸ் அப் வேறு என்ன செய்துள்ளது?

இரு காரணி அங்கீகார நடைமுறையை அடுத்து வாட்ஸ் அப் மேலும் ஒருசில பாதுகாப்பு அம்சங்களை யோசனையில் வைத்துள்ளது. ஒருசில முக்கிய தகவல் பரிமாற்றத்திற்கு செக்யூரிட்டி கோட் அவர்களுடைய மொபைல் எண்ணுக்கு அனுப்பவும் திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமின்றி வாட்ஸ் அப் பயனாளிகளின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டுகளில் பாதுகாப்பு லேயர்கள் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இதனால் மூன்றாவது நபர் நம்முடைய யூசர்நேமை பயன்படுத்தாத வகையில் அமைக்கப்படும்

விண்டோஸ் பயனாளிகளுக்கு மட்டுமே

வாட்ஸ் அப் செயலியின் இந்த புதிய வசதிகள் தற்போதைக்கு விண்டோஸ் போன் பயனாளிகளுக்கு மட்டுமே வழங்குகிறது. இதில் கிடைக்கும் ரிசல்ட்டை அடுத்து அனைத்து வகை போன்களுக்கும் இந்த வசதி வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வசதி பயனாளிகளுக்கு எப்போது கிடைக்கும்?

இந்த பாதுகாப்பு அம்சங்களை வாட்ஸ் அப், எப்போது தனது பயனாளிகள் பயன்படுத்த அனுமதிக்க உள்ளது என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை. வெகுவிரைவில் பயனாளிகள் இந்த வசதியை பெறலாம் என்று கூறப்பட்டாலும், இன்னும் அதிக காலங்கள் வாட்ஸ் அப் எடுத்து கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...