மெய்நிகர் உலகம் :கூகுளின் 'டேட்ரீம் வியூ' மெய்நிகர் கருவி!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கூகுள், 'கார்ட்போர்டு' என்ற அட்டையினாலான மெய்நிகர் சாதனத்தை அறிமுகப்படுத்தி, அத்தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்தியது. இன்று ஸ்மார்ட்போனை மெய்நிகர் சாதனத்தில் பொருத்தி, காணொலிகளை பார்ப்பது பரவலாகிவிட்டது. இன்று கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள, 'டேட்ரீம் வியூ' என்ற புதிய சாதனம், மெய்நிகரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. ரூ.5,678 விலை கொண்ட டேட்ரீம் வியூ சாதனம் முதலில், 'சிலேட்' நிறத்தில் மட்டும் கிடைக்கும். பிற்பாடு, 'கிரிம்சன், ஸ்னோ' ஆகிய நிறங்களிலும் கிடைக்கும். இப்போதைக்கு, டேட்ரீம் வியூ சாதனத்தில், கூகுளின் தயாரிப்பான, 'பிக்செல்' மற்றும் 'பிக்செல் எக்செல்' ஆகிய போன்களை மட்டுமே பொருத்தி மெய்நிகர் காட்சிகள், கேம்களை ரசிக்க முடியும். மொபைல் இயங்குதளமான ஆண்ட்ராய்ட் நவ்காட்டில் மட்டுமே இயங்கக்கூடிய 'டேட்ரீம் வி.ஆர்.,' என்ற மெய்நிகர் மென்பொருள் விரைவில் மற்ற ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களிலும் கிடைக்கும். அப்போது அத்தகைய போன்களை வைத்திருப்பவர்களும் டேட்ரீம் வியூ சாதனத்தில் பொருத்தி, மெய்நிகர் உலகில் நுழைய முடியும். டேட்ரீம் வியூ சாதனத்தின் வெளிப்பகுதி பருத்தித் துணி மற்றும் பிளாஸ்டிக் நுரைத் துணியால் போர்த்தப்பட்டிருக்கிறது. இது, தலையில் பொருத்திக் கொள்ளும் மற்ற மெய்நிகர் சாதனங்களைவிட மென்மையானதாக இருக்கும் என்கிறது கூகுள். பலவித மெய்நிகர் விளையாட்டுக்களை ஆடுவதற்கும், காட்சிகளை கட்டுப்படுத்தவும் மூன்று பொத்தான்கள் கொண்ட கையடக்க, 'ரிமோட்'டும் இச்சாதனத்துடன் கிடைக்கும்.துப்பாக்கி சுடும் விளையட்டான, 'கன்ஜாக் 2, டேஞ்சர் கோட்' என்ற புதிர் விளையாட்டு, 'பென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் அண்ட் வேர் டு பைண்ட் தெம்' என்ற புதுமையான அனுபவ ஆட்டம் போன்றவையும் டேட்ரீம் வியூவுடன் கிடைக்கும். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அறிமுகமாகும் இந்த சாதனம், விரைவில் இந்தியாவுக்கும் வந்துவிடும்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...