மெய்நிகர் உலகம்: எச்.டி.சி.,யின் புதிய 'வைவ்' எப்போது?

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான, எச்.டி.சி., 'வால்வ்' நிறுவனத்துடன் சேர்ந்து, 'வைவ்' என்ற மெய்நிகர் சாதனத்தை சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டது. யாரும் எதிர்பாராத வகையில், மெய்நிகர் துறையில், எச்.டி.சி., தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறது. 'வைவ்' சாதனத்திற்கென்றே நிறைய கேம்களும், இதர மெய்நிகர் மென்பொருட்களும் வர ஆரம்பித்திருக்கின்றன.

எனவே, இனி இரண்டு ஆண்டிற்கு ஒரு முறையாவது, வைவ் சாதனத்தின் புதிய பதிப்பை வெளியிட எச்.டி.சி., தீர்மானித்திருக்கிறது. அதன்படி, வரும் ஜனவரி, 2017ல் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடக்கவிருக்கும், சி.இ.எஸ்., எனப்படும் நுகர்வோர் மின்னணு காட்சியின் போது, வைவ் சாதனத்தின் மேம்படுத்தப்பட்ட, புதிய பதிப்பை எச்.டி.சி., வெளியிடவிருக்கிறது. மெய்நிகர் சாதனத்தின் உள்ளே இயங்கும் மென்பொருளிலும், அசைவுகளை கண்காணிக்கும், 'லைட்ஹவுஸ் வி.ஆர்' கருவியிலும் மாற்றங்களை எச்.டி.சி., கொண்டு வரவிருக்கிறது.

வைவ் தலைக் கவச சாதனத்தை அணிந்து விளையாடுவோர் பயன்படுத்த, 'ஸ்டியரிங்' கத்தி, கவசம் போன்ற பலவித துணை சாதனங்களையும் எச்.டி.சி., வெளியிடும். வைவ் சாதனம் தலையில் அணிவதற்கு எளிதாக இல்லை, கனமாக இருக்கிறது என்ற குறை பலருக்கு இருக்கிறது. எனவே புதிய வைவ் சாதனத்தின் எடை, கணிசமாக குறைக்கப்படும் என, எச்.டி.சி., பிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...