பூமியை நோக்கி புயலாய் ஒரு எரிகல்! நடுங்க வேண்டாம் என்கிறது நாசா

பிரபஞ்ச வெளியில் கட்டுப்பாடின்றி அலைந்து கொண்டிருக்கும் சில விண்கற்கள், சில நேரங்களில் தடம் மாறி, பூமியை நோக்கி வருவது வழக்கம். எரிகற்கள் என்றழைக்கப்படும் இந்த விண்கற்கள், சிறியவையாக இருந்தால் பயப்பட ஒன்றுமில்லை. பெரும் பாறைகளை ஒத்த அளவில் இருந்தால், பூமி உருண்டைக்கு சேதாரம் ஏற்படும்.

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, நாசா விஞ்ஞானிகள் விண்ணை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, பூமியில் இருந்து கிட்டத்தட்ட 3 லட்சத்து 10 ஆயிரம் மைல் தொலைவில் ஒரு பெரிய எரிகல் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

இந்த பிரம்மாண்ட எரிகல் பூமியின் மீது விழாது என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதன் தடம் மாறினால் ஆபத்து என்பதால், அக்கல்லை நாசா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதற்கு, நாசாவின் உயர்தொழில்நுட்ப முறையான ஸ்கவுட் கம்ப்யூட்டர் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது.

அதிக திறன் கொண்ட தொலைநோக்கிகளுடன் இணைக்கப்பட்ட கருவிகள், தொடர்ந்து அந்த எரிகல்லை கண்காணித்து, அதன் நகர்வை அவ்வப்போது விஞ்ஞானிகளுக்கு தரும் வல்லமை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், எரிகல்லின் ஒவ்வொரு நகர்வையும் அறிந்து, அதற்கேற்றபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணில் தொடர்ந்து செய்து வரும் ஆய்வுகள் மூலம், இதுவரை 15ஆயிரத்திற்கும் அதிகமான விண்கற்கள் சுற்றி வருவதை நாசா கண்டறிந்துள்ளது. இவற்றில், கிட்டத்தட்ட 1700 விண்கற்கள் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய விண்சுற்றில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் அவை பல கோடி மைல் தூரத்தில் தற்போது உள்ளன என்பது ஆறுதல் தகவல்.

இது குறித்து நாசா அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛பூமி உருண்டைக்கு ஆபத்து ஏற்படுத்தும் மிகப் பெரிய விண்கற்கள் குறித்து அறிந்து, அது குறித்த எச்சரிக்கையை தரும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதால், விண்கற்கள் குறித்து பயம் கொள்ளத் தேவையில்லை' என்றார்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...