பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள்

விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் பணியாற்றிய மூன்று வீரர்கள், நேற்று பூமிக்கு திரும்பினர்.

விண்வெளி ஆராய்ச்சிக்காக, விண்வெளியில், பல்வேறு நாடுகள் இணைந்து, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அமைத்துள்ளன. அங்கு ஆராய்ச்சி பணிக்காக சென்ற, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த மூன்று பேர், சோயுஸ் விண்கலம் மூலம், நேற்று மத்திய ஆசிய நாடான கஜகஸ்தான் வந்து சேர்ந்தனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த வீராங்கனை கேதே ரூபின்ஸ், விண்வெளியில், டி.என்.ஏ., எனப்படும் மரபணு பரிசோதனை மேற்கொள்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டார்.இவருடன், ரஷ்யாவைச் சேர்ந்த அனதோலி இவானிஷின், ஜப்பானைச் சேர்ந்த தகுயா ஓனிஷி ஆகியோர், 115 நாட்கள் பயணத்துக்கு பின், நேற்று பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.

புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள, சோயுஸ் விண்கலம் மேற்கொள்ளும் முதல் பயணம் இது. ரூபின்ஸ், ஓனிஷிக்கு, இது முதல் பயணமாகும்; இவானிஷின், ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஐந்து மாதங்கள் பயணம் மேற்கொண்டவர். அடுத்ததாக, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த மூன்று பேர், நவ., 17ல், விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...