விண் துகள்கள்: 'ஒன்பதாவது கோள்' மர்மம் விலகியதா?

சூரியன் ஏன் சற்று சாய்வாக இருக்கிறது என்பதற்கு விடை கிடைத்திருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் விஞ்ஞானிகள் சொல்கின்றனர். புளூட்டோ ஒரு கிரகம் அல்ல என்று நிறுவியவரான விஞ்ஞானி மைக் பிரவும், கான்ஸ்டான்டின் ஆகியோர், புளூட்டோவுக்கு அப்பால் ஒரு பெரிய கோள் அல்லது விண் பொருள் இருக்கிறது என்றும், அதன் விசைதான், சூரியனை தன் இயல்பு நிலையிலிருந்து, 6 டிகிரி சாய்வாக இருக்கும்படி செய்கிறது என்றும் ஒரு கருத்தினை முன்வைத்திருக்கின்றனர். அவ்வளவு பெரிய கோள் இருப்பதால், சூரியன் அதன் விசைப் புலத்தால் பாதித்து சாய்மானம் அடைவதைத் தவிர வேறு வழி இல்லை என்று இது குறித்து ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்துள்ள விண்வெளி விஞ்ஞானியான எலிசபெத் பெய்லி, சமீபத்தில் அறிவித்து உள்ளார். முன், ஒன்பதாவது கிரகம்தான் சூரியனை பாதிக்கிறது என்று ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. புளூட்டோ ஒரு கிரகமல்ல என்று ஆன பின், வேறு எது சூரியனை பாதிக்கிறது என்ற தேடல், விஞ்ஞானிகள் இடையே இருந்தது. இப்போது எலிசபெத் உள்ளிட்டவர்கள் சுட்டிக்காட்டும் அந்த மர்ம கிரகம் சூரியனை பாதிப்பது உறுதியானால், அந்த கிரகம்தான் ஒன்பதாவது கிரகமாக இருக்க வேண்டும் என்றும், ஒரு தரப்பு விஞ்ஞானிகள் வாதிட ஆரம்பித்துள்ளனர். அது எப்படி பிரபஞ்ச வரைபடத்தையே தயாரிக்கும் இந்த யுகத்தில், அத்தனை பெரிய கோள் நம் கண்ணில் படாமல் போனது?

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...