ஆண்ட்ராய்டில் உள்ள ரகசிய தொடு சைகைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?


சில நேரங்களில் ஆண்ட்ராய்டு கருவிகள் ஆனது பயனர்களை பெருமூச்சு விட வைக்கும், நாம் அடிக்கடி அதன் மிகவும் பயனுள்ள சில அம்சங்களை அணுக முடியாமல் தவிப்போம் ஆனால் அது நாம் நினைக்கும் அளவிற்கு கம்பசூத்திரமாக இருக்காது மிக எளிமையான ஒரு விடயமாகவே தான் இருக்கும். அவைகளை தெரிந்துகொள்ளாமல் இருக்கும் வரை தான் நமக்கு சிரமம். ஆக, ஆண்டராய்டு பயனர்களே முதலில் ஸ்மார்ட் ஆன ரகசிய டச் ஆப்ஷனைகளை தெரிந்துக்கொள்ளுங்கள் உங்கள் கருவிகளை இன்னும் அதிகமான அனுபவத்தில் பயன்படுத்துங்கள். முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்மார்ட் டச் #01:

ஆப் நோட்டிபிகேஷன்களை லாங் பிரஸ் செய்தால் ஆப்ஸ் செட்டிங்ஸ் செல்லலாம்.!

காக் ஐகானுக்குள்:

உங்களுக்கு கிடைக்கும் மெசேஜ் நோட்டிபிகேஷன்களை ஸ்லைட் செய்து மறைத்து விடுவது மட்டும்தானே உங்களுக்கு தெரியும், அதை லாங் பிரஸ் செய்து பின்னர் காக் ஐகானுக்குள் நுழைய நீங்கள் செட்டிங்ஸ் ஆப்ஷன் செல்வீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா..!

ஸ்மார்ட் டச் #02:

டெக்ஸ்ட் மீதான டபுள் டாப் ஷார்ட்கட்களுக்கு உங்களை அழைத்து செல்லும்.

பல உதவி:

ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ வந்துவிட்டது என்பதால், வழக்கமான கட்-காப்பி-பேஸ்ட் ஆப்ஷனில் ஒரு முக்கிய மேம்படுத்தல் கிடைக்கிறது இப்போது, ஒரு வார்த்தையை டபுள் டாப் செய்வதின் மூலம் குறிப்பிட்ட சொற்றொடர் ஆனது காப்பி மற்றும் சில ஆப்ஷன்கள் சேர்த்து ஒரு மெனு பொத்தானை உங்களுக்கு கொடுக்கிறது இந்த மெனு பொத்தான் தேர்வு செய்த வார்த்தையை நீங்கள் வலைத்தளத்தில் தேட, கூகுள் அசிஸ்டன்ட் மூலமாக மொழிமாற்றம் செய்ய போன்ற பல உதவிகளை செய்யும்

ஸ்மார்ட் டச் #03:

எந்த ஸ்க்ரீனில் ஜூம் செய்யலாம்.!

அக்சஸபிலிட்டி:

பல பயன்பாடுகள் நீங்கள் இரண்டு விரல்களை வைத்து விரிப்பதின் மூலம் திரையில் ஜூம் செய்ய அனுமதிக்கும். இருப்பினும் அனைத்து பயன்பாடுகளிலும் இது வேலை செய்யாது. ஆனால் அதை நிகழ்த்த ஒரு வழி உள்ளது. அதற்கு செட்டிங்ஸ் >அக்சஸபிலிட்டி > மெக்னிபிகேஷன் கெஸ்டர்ஸ் செல்வதன் மூலம் நீங்கள் திரையை மூன்று முறை டாப் செய்வதின் மூலம் ஜூம் நிகழ்த்த முடியும்.

ஸ்மார்ட் டச் #04:

உங்கள் கூகுள் கீபோர்டின் அளவை மாற்றலாம்.!

என்டர் கீ:

நீங்கள் உங்கள் கீபோர்டின் அளவை மாற்ற விரும்பினால் புதிய ஆப்ஷன் உங்கள் ஸ்க்ரீனில் தோன்றும் வரையிலாக என்டர் கீயை சிறிது நேரம் தொடர்ந்து அழுத்துவதின் மூலம் அதை நிகழ்த்தலாம்

ஸ்மார்ட் டச் #05:

ஹோம் ஸ்க்ரீனில் இருந்து நேரடியாக ஒரு ஆப்பை அன்இன்ஸ்டால் செய்யலாம்.!



லாங் பிரஸ்:

அன்இன்ஸ்டால் செய்ய வேண்டிய குறிப்பிட்ட ஆப் மீதுஹோம் ஸ்க்ரீனில் இருந்தபப்டியேநீங்கள் லாங் பிரஸ் செய்வதின் மூலம் அந்த ஆப்பை நேரடியாக அன்இன்ஸ்டால் செய்வதற்கான அணுகல் உங்களுக்கு கிடைக்கும்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...