அனைத்துக் கார்களிலும் ஆளில்லாமல் ஓடக்கூடிய தொழில்நுட்பம்- டெஸ்லா நிறுவனம்

அமெரிக்க மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான, டெஸ்லா, இனி தான் தயாரிக்கப் போகும் அனைத்து கார்களிலும், ஆளில்லாமல் ஓட்டக்கூடிய தொழில்நுட்பம் பொருத்தப்படப் போவதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே தயாரிப்பில் உள்ள இரு மாடல்கள் தானாக ஓடக்கூடிய கருவிகளைக் கொண்டிருக்கின்றன. இவைகளில் அதிநுட்பம் வாய்ந்த கேமராக்கள் மற்றும் பிற மென்னுணர் கருவிகளும் (சென்சர்கள்) அடங்கும். இவை இனி தயாரிக்கப்படவிருக்கும் அனைத்து கார்களிலும் அறிமுகப்படுத்தப்படும்.

தானியங்கிக் கார்களை பொது வீதிகளில் தங்கு தடையில்லாமல் பயன்படுத்த அமெரிக்க மற்றும் உலகின் பிற பகுதிகளில் இருக்கும் நாடுகளின் போக்குவரத்து கட்டுப்பாடு அமைப்புகளும் இன்னும் அனுமதிக்கவில்லை.

பல இடங்களில் இத்தொழில்நுட்பம் பரீட்சிக்கப்பட்டுவருகிறது. ஆனால் தேவைப்பட்டால் இந்த வாகனங்களில் ஓட்டுநர்களும் தயாராக இருக்கவேண்டும் என்பதுதான் தற்போதைய விதியாக உள்ளது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...