விண்வெளியிலிருந்து வரும் மர்ம சிக்னலுக்கு காரணம் வேற்றுக்கிரக வாசிகளா? ஐந்து சாத்தியங்கள்

விண்வெளியில் 150 கோடி ஒளியாண்டு தூரத்தில் இருந்து வெளியான அரியவகை ரேடியோ சிக்னல் கனடா நாட்டின் வான் நோக்கு நிலையம் ஒன்றில் இருந்து பார்க்கப்பட்டது குறித்து நேச்சர் ஆய்விதழில் செய்தி வெளியாகி இருந்தது.


விண்வெளியில் 150 கோடி ஒளியாண்டு தூரத்தில் இருந்து வெளியான அரியவகை ரேடியோ சிக்னல் கனடா நாட்டின் வான் நோக்கு நிலையம் ஒன்றில் இருந்து பார்க்கப்பட்டது குறித்து நேச்சர் ஆய்விதழில் செய்தி வெளியாகி இருந்தது.

இது நியூட்ரான் நட்சத்திரங்களின் ஒன்றாக இணைவதால் வெளியாவதா? அல்லது வேற்றுக்கிரக வாசிகளின் வாகனத்தில் இருந்து வெளியாகும் சமிக்ஞையா? உண்மையில் இந்த சமிக்ஞை என்னவாக இருக்கும் என்பது குறித்து விஞ்ஞானிகளிடையே ஐந்துவிதமான கோட்பாடுகள் நிலவுகின்றன.

விண்வெளியில் இருந்து வெளியாகும் ஒரு அரியவகை ரேடியோ சிக்னலுக்கு 'ரேடியோ வேக அதிர்வுகள்' (Fast Radio Bursts) என்று பெயரிட்டுள்ளார்கள் விஞ்ஞானிகள். இந்த அதிர்வு மில்லி செகண்ட் மட்டுமே தோன்றும் பிரகாசமான ஒளி அலை. இந்த அதிர்வுகளை சக்திவாய்ந்த ரேடியோ டெலஸ்கோப்புகள் மூலமே காண முடியும்.

இதுவரை இந்த அதிர்வுகள் 60 முறை ஒற்றை அதிர்வுகளாக காணப்பட்டுள்ளன. ஆனால், ஒரே ஒருமுறை இந்த அதிர்வு திரும்பத் திரும்ப நிகழும் மீளதிர்வாகப் பதிவு செய்யப்பட்டது. இத்தகைய மீளதிர்வுதான் தற்போது இரண்டாவது முறையாக கனடா நாட்டு சைம் (CHIME) வான் நோக்கியகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

150 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் இருந்து வந்த மர்ம ரேடியோ சிக்னல் கண்டுபிடிப்பு




விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் - என்ன நடக்கிறது?

தொலைதூர நட்சத்திரக் கூட்டங்களில் இருந்து வெளியாகும் இந்த சிக்னல்கள் மிகச்சரியாக எங்கிருந்து வருகின்றன, இவை எதன் விளைவு என்பது குறித்து தற்போது சரியாக எதுவும் தெரியாது. ஆனால், விஞ்ஞானிகளிடம் நிலவும் ஐந்து விதமான கருத்துகள் இதோ:

1. வேகமாக சுழலும் நியூட்ரான் நட்சத்திரம்



இதனை நியூட்ரான் நட்சத்திரத்தின் விளைவு என்று குறிப்பிடுவது ஓரளவு பொருந்தும் என்று கூறுகிறார் கனடாவின் வான்கூவரில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக வான் இயற்பியலாளர் இன்கிரிட் ஸ்டேர்ஸ்.

ஆனால், சக்திவாய்ந்த இந்த ரேடியோ அதிர்வுகளை உருவாக்குவதில் என்ன இயற்பியல் விதி செயல்படுகிறது என்பது குறித்து இதுவரை தெரியாது என்கிறார் அவர்.

2. இரண்டு நட்சத்திரங்கள் ஒன்றிணைவது

இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் ஒன்றிணைவதால் எழும் அதிர்வாக இது இருக்கலாம் என்பது இன்னொரு சாத்தியம். கனடாவின் மான்ட்ரியலில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியலாளர் ஸ்ரீஹர்ஷ் டெண்டுல்கள், நியூட்ரான் நட்சத்திரம்தான் ஒரு முக்கிய சாத்தியம் என்கிறார்.

ஆனால், இப்படி இணைகிற நியூட்ரான் நட்சத்திரங்கள் முடிவில் அழிந்துவிடும் என்பதால் ஒருமுறை தோன்றும் அதிர்வுக்கு வேண்டுமானால் இந்த கோட்பாடு பொருந்தும். இதுபோன்ற பேரூழி நிகழ்வு ஒன்றில் இருந்து மீளதிர்வுகள் தோன்றாது என்கிறார் டெண்டுல்கர்.

செவ்வாய் கிரகத்தில் பனிப்பள்ளம் : சிலிர்ப்பூட்டும் புகைப்படங்கள் வெளியீடு

சூரிய மண்டலத்தின் கதையை சொல்லும் 'வினோத விண்கல்'

கடந்த பத்தாண்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள ரேடியோ வேக அதிர்வுகளில் பெரும்பாலானவை ஒரு முறை மட்டுமே பதிவாகியுள்ளன. மீண்டும் மீண்டும் நிகழ்ந்த அதிர்வுகள் இரண்டு முறை மட்டுமே நிகழ்ந்துள்ளன. இதற்கு வேறுவிதமான விளக்கம்தான் தேடவேண்டும் என்கிறார் அவர்.

3. பிளிட்சார்

அதிவேகமாக சுழலும் நியூட்ரான் நட்சத்திரம் ஒன்று தமது எடை தாங்காமல் தாமே சிதைவுற்று கருந்துளையை ஏற்படுத்துமானால் அது பிளிட்சார் என்று அழைக்கப்படும்.

இத்தகைய பிளிட்சார் ஒன்றினால், இத்தகைய அதிர்வு சிக்னல் தோன்றியிருக்கலாம் என்பது ஒரு கருத்து. இந்த நிகழ்வும் நட்சத்திரம் அழிவதோடு முடிந்துவிடும் என்பதால் திரும்பத் திரும்ப நிகழும் மீளதிர்வு இதிலும் சாத்தியமில்லை.

4. கருந்துளை

ஒரு நட்சத்திரத்தின் வாழ்க்கை சுழற்சியில், நட்சத்திரம் அதீதமான அடர்த்தி மிக்கதாகி, விண்வெளியில் அருகில் உள்ள எல்லாப் பொருளையும், ஒளியையும் தம்மை நோக்கி உறிஞ்சிக்கொள்ளுமானால் அது கருந்துளை ஆகும்.

தற்போது இந்த மீளதிர்வுகளுக்கு கருந்துகளை எப்படி காரணமாக முடியும் என்பதற்கு சில விளக்கங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் ஒன்று, ஒரு நியூட்ரான் நட்சத்திரம் கருந்துளையில் விழுவதால் ஏற்படும் அதிர்வாக இது இருக்கலாம் என்பது. மற்றொன்று கருந்துளை ஒன்று சிதைவதால் ஏற்படும் அதிர்வாக இது இருக்கக்கூடும் என்பது.



5. வேற்றுக்கிரகவாசிகள்



இந்த மீளதிர்வு சிக்னல்கள் ஏதோ ஒரு இயற்கை புலப்பாடு மூலம் உருவாவது என்று சில விஞ்ஞானிகள் கருதினாலும், வேறு சிலரோ, வேற்றுக்கிரகவாசிகளின் நடவடிக்கைகளால் இது தோன்றியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். ஆனால், டாக்டர் ஸ்டேர்ஸ் இதற்கு சாத்தியம் குறைவு என்கிறார்.

"இந்த சிக்னல்கள் விண்வெளியில் வேறுபட்ட தொலைவுகளில் இருந்து நீண்ட பயணம் செய்து வருகிறவை. இவற்றில் ஒவ்வொரு சிக்னலும் வெவ்வேறு நட்சத்திரக் கூட்டங்களில் இருந்து வரக்கூடியவை" என்று பிபிசியிடம் கூறுகிறார் ஸ்டேர்ஸ்.

பரந்த விண்வெளியில் வெவ்வேறு இடங்களில் இருக்கும் வேற்றுக்கிரக வாசிகளிடம் இருந்து, இதுபோல ஒரே விதமான சிக்னல்கள் வருவது சாத்தியமில்லை. எனவே, இந்த சிக்னல்கள் வேற்றுக்கிரகவாசிகளால் உருவாகியிருக்க வாய்ப்பு மிகமிகக் குறைவு என்கிறார் ஸ்டேர்ஸ்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...