ஜெட் விமானம் ராக்கெட் என்ஜின் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள கார்!

லண்டனில் உருவாகிக்கொண்டிருக்கும் உலகின் அதிவேக காரின் மேம்பாட்டுப்பணிகளுக்காக சீனாவைச் சேர்ந்த கார் நிறுவனம் தனது பங்களிப்பை வழங்க உள்ளது. 

உலகில் அதிநவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிவேக கார் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 1,600 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் சூப்பர்சானிக் கார் லண்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 



Blood hound சூப்பர்சானிக் என்று பெயரிடப்பட்டுள்ள 13.5 மீட்டர் நீளமுள்ள இந்த காரில், ஜெட் விமானம் மற்றும் ராக்கெட்களுக்கு பயன்படுத்தப்படும் என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில் அதிகவேக காரில் அதிக சத்தம் மற்றும் அதிர்வுகள் ஏற்படுவதால், அதை சரிசெய்வதற்கான பொறுப்பை சீனாவைச் சேர்ந்த புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமான ஜேஜியாங் கீலி ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இங்கிலாந்தில் நடைபெற்றது. அதிவேக காரின் ஓட்டுனரான Andy Green-க்கு ஏற்றார் போல, கார் மேம்படுத்தப்படும் என ஜேஜியாங் கீலி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன் ஆயிரத்து 288 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு கார் இயக்கப்பட்டதே அதிகபட்ச சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தென்ஆப்ரிக்காவில் அடுத்த ஆண்டு Blood hound சூப்பர் சானிக் முறியடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...