இளமை விரதம் இருந்தால் திரும்புமா?

உணவுக் கட்டுப்பாட்டுக்காக விரதம் இருப்பதால் என்னபயன்? உடலின் எடையைக் குறைப்பதைத் தவிர, அது வயதையும் குறைக்க உதவும் என, ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அண்மையில் கண்டறிந்து உள்ளனர்.

உணவுக் கட்டுப்பாட்டுக்காக விரதம் இருப்பதால் என்னபயன்? உடலின் எடையைக் குறைப்பதைத் தவிர, அது வயதையும் குறைக்க உதவும் என, ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அண்மையில் கண்டறிந்து உள்ளனர்.

அவ்வப்போது உணவு உண்ணாமல் விரதம் இருக்கும்போது, உடலுக்குள், 'கீடோசிஸ்' என்ற ஒரு வேதியல் நிகழ்வு நடக்கிறது.

உடல், தெம்புக்காக குளூகோசை நாடாமல், உடலில் சேமிக்கப்பட்டுள்ள உபரி கொழுப்பை செரிக்கிறது. உடலில் தெம்பு தரும் சில வேதிப் பொருள்களும் இருக்கின்றன.

அவற்றை, 'கீடோன்' என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இந்த கீடோன்களில் பீட்டா ஹைட்ராக்சிபியூடைரேட் என்ற மூலக்கூறும் உள்ளது.

இந்த மூலக்கூறுகள் ரத்த நாளங்களின் செல்களை வேகமாகப் பெருக்கி, உடல் முதுமையடையும் வேகத்தை மட்டுப்படுத்துவதாக ஒரு ஆய்வில் ஹார்வர்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

இந்த ஆய்வு எலிகளின்மேல் நடத்தப்பட்டது என்றாலும், மனிதர்களை அடுத்த, 24 மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடாதீர்கள் என்று சொல்வது கடுமையான சிகிச்சையாக இருக்கும் என, ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆனால், விரதம் இருக்கும்போது உடலில் உருவாகும் இளமை தரும் வேதிப்பொருள்களை துல்லியமாக கண்டுபிடித்தால், அந்த வேதிப் பொருளை இதய நோய்கள், அல்சைமர்ஸ் போன்றவற்றை கட்டுப்படுத்த உதவும் என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...