மாலுமி இல்லாத படகு

உலகிலேயே முதல் முறையாக, மாலுமி இல்லாத படகு ஒன்று, தானாகவே வட அட்லாண்டிக் கடலைக் கடந்திருக்கிறது.

உலகிலேயே முதல் முறையாக, மாலுமி இல்லாத படகு ஒன்று, தானாகவே வட அட்லாண்டிக் கடலைக் கடந்திருக்கிறது.

நார்வேயைச் சேர்ந்த, 'ஆப்ஷோர் சென்சிங்' இரண்டு ஆண்டுகளாக இந்த சாதனையை செய்ய முயன்று தோற்றது.

கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட மாலுமி இல்லாத படகு, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சில ஆயிரம் கி.மீ., பயணித்த பிறகு, தடுமாறிக் கொண்டிருந்தது. ஒரு மீன்பிடி படகு, அந்த மாலுமி இல்லாத படகை மீட்டு வந்தது.

ஆனால், ஜூன், 7 அன்று நியூபவுண்ட்லாந்திலிருந்து புறப்பட்ட, 'செய்ல் பயோய் மெட்' என்ற மாலுமி இல்லாத படகு, 3,000 கி.மீ.,தொலைவில் உள்ள அயர்லாந்து கடற்கரையை, ஆகஸ்ட், 26 அன்று வந்தடைந்தது.

சூரிய மின் பலகையும், பாய் மரமும் பொருத்தப்பட்ட செய்ல் பயோய் படகில், மாலுமி இல்லாத தொழில்நுட்பக் கருவிகளுடன் கடும் காற்று, காட்டமான அலைகள் என, எல்லாவற்றையும் சமாளித்து கரை சேர்ந்துள்ளது.

ஓட்டுனர் இல்லாத கார்களைப் போலவே, கடலிலும் மாலுமி இல்லாத படகுகள், அடுத்த, 10 ஆண்டுகளுக்குள் வந்துவிடும் என, வல்லுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...