மூளையை பாதிக்கும் காற்று மாசு

சீனாவில், 20 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவுகள் திடுக்கிட வைக்கின்றன.

சீனாவில், 20 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவுகள் திடுக்கிட வைக்கின்றன. அதிக காற்று மாசு உள்ள இடங்களில் வசிப்பவர்களுக்கு, அவர்கள் சுவாசிக்கும் நச்சுக்களால் மூளைத் திறன் பாதிக்கப்படுவதாக, அந்த பன்னாட்டு ஆய்வாளர்கள் செய்த ஆய்வு தெரிவிக்கிறது.

பத்து வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்ற அந்த நீண்ட கால ஆய்வு, ஆண்டுக்கு ஒரு முறை என, நான்கு ஆண்டுகளுக்கு நடத்தப்பட்டது. ஆய்வில் பங்கேற்றோருக்கு, எளிய கணிதப் புதிர்கள் மற்றும் சொல் விளையாட்டுகள் தரப்பட்டன. 

அவர்களில் யாரெல்லாம், நைட்ரஜன் டையாக்சைடு மற்றும் சல்பர் டையாக்சைடு போன்ற நச்சுக்களை அதிக காலம் சுவாசித்தனரோ, அவர்களுக்கு மூளைத் திறன் கவனிக்கத்தக்க அளவு பாதிக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக, ஆய்வில் பங்கேற்றோரில் அதிக வயது உள்ளோருக்கு சொல் ஆற்றல் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆய்வு சீனாவில் நடத்தப்பட்டது தான். என்றாலும், இன்று உலகின், 90 சதவீத மக்கள் வசிக்கும் பகுதிகளில், ஐ.நா., நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச தரத்தை விட மிக குறைவாகவே காற்றின் தன்மை இருப்பதால், இந்த ஆய்வு, உலகின் பல நாடுகளுக்குப் பொருந்தும் என்கின்றனர் வல்லுனர்கள். நிம்மதியாக சுவாசிக்கக் கூட முடிவதில்லை!

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...