இருண்ட குகையில், 'ஆன்டிபயாடிக்'

நோய் கிருமிகள், 'ஆன்டிபயாடிக்' மருந்துகளை எதிர்க்கத் துவங்கிவிட்டன. செய்வதறியாமல் மருத்துவர்கள் கையை பிசைகின்றனர்.

நோய் கிருமிகள், 'ஆன்டிபயாடிக்' மருந்துகளை எதிர்க்கத் துவங்கிவிட்டன. செய்வதறியாமல் மருத்துவர்கள் கையை பிசைகின்றனர்.

பல ஆன்டிபயாடிக்குகள், சேற்றிலுள்ள கிருமிகள் சுரக்கும் வேதிப் பொருட்களை வைத்தே உருவாக்கப்படுகின்றன. 

எனவே, மனிதக் காலடி படாத, இருண்ட குகைகளுக்குள் வசிக்கும் நுண்ணுயிரிகளை வைத்து, புதிய வகை ஆன்டிபயாடிக் தயாரிக்க முடியுமா என, சில விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

கனடாவில், காடுகள் அடர்ந்த மலைச் சரிவுகளில் உள்ள குகைகளுக்குள் நிலவும் மாறுபட்ட தட்ப வெப்பநிலையை தாக்குபிடித்து வாழும் பாக்டீரியாக்கள் உள்ளன. அவை, கடும் சூழலிலும் உயிர் வாழக்கூடிய, 'எக்ஸ்ட்ரீமோபைல்ஸ்' வகையைச் சேர்ந்தவை.

அவற்றை, கனடாவின் தாம்சன் ரிவர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, நவோவரத் சீப்தம் மற்றும் சில ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து, 2016ல், 'டைவர்சிட்டி' இதழில், 100 பாக்டீரியாக்களை பட்டியலிட்டுள்ளனர். இதில், 12 சதவீத பாக்டீரியாக்கள் யாரும் அறியாதவை.

இந்த பாக்டீரியாக்கள் உற்பத்தி செய்யும் வேதிப் பொருட்கள், நோய் கிருமிகளை கொல்லும் திறன் படைத்தவையாக இருக்கும் என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர். குகையிலிருந்து சீக்கிரம் வெளியே வந்து, புதிய ஆன்டிபயாடிக்குகளை தாருங்கள் விஞ்ஞானிகளே!

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...