தாவரங்களின் தப்பிக்கும் உத்தி!

செடிகள், தங்களுக்கு ஆபத்து வருவதை உணர்ந்தால், அதை சில வாசனைகள் மூலம் வெளிப்படுத்துகின்றன என்பதை, ஆய்வுகள் உறுதி செய்து உள்ளன.

செடிகள், தங்களுக்கு ஆபத்து வருவதை உணர்ந்தால், அதை சில வாசனைகள் மூலம் வெளிப்படுத்துகின்றன என்பதை, ஆய்வுகள் உறுதி செய்து உள்ளன.

இதை விவசாயிகள் பயன்படுத்தி, தங்கள் பயிர்களை பூச்சிகளிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள முடியுமா? முடியும் என்கின்றனர், அமெரிக்காவில் உள்ள, டிலாவர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

ஒரு சோதனை களத்தில், சோளம் பயிரிட்டு, அந்த பயிர்களின் சில பகுதிகளில், சோளத்தை அறுவடை செய்யும் போது வரும் வாடை கொண்ட வேதிப் பொருட்களை, விஞ்ஞானிகள் தெளித்தனர்.

வேறு சில இடங்களில் வேறு வாடை கொண்ட திரவத்தை தெளித்தனர். எதிர்பார்த்த படியே, சிறிது நேரத்தில், சோளம் அறுவடை செய்யும் போது வரும் வாடை உள்ள பயிர்கள் மீது, பறவைகள் வந்து அதிக முறை கொத்த ஆரம்பித்தன.

அறுவடை வாடை இல்லாத பயிர்கள் மீதும் சில பறவைகள் கொத்தின என்றாலும், அறுவடை வாடை உள்ள பயிர்கள் மீது ஏழு முறை அதிகமாக பறவைகள் கொத்தின.

அதாவது, செடிகள் வெளியிடும் வாடை, பறவைகளை ஈர்க்க, அவை வந்து பார்க்கும்போது புழுக்கள், பூச்சிகள் ஏதும் இருந்தால் அவற்றை கொத்தி தின்றுவிடும். இதனால், பயிர்கள் பாதுகாக்கப்படும்.

இந்த உத்தியை விவசாயிகள் பயன்படுத்தினால், பூச்சி மருந்துகளை தெளிப்பதற்குப் பதில், பயிர்களே ஆபத்தில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள வெளியிடும் வாசனை வேதிப் பொருட்களை தெளிக்கலாம் என, டிலாவர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...