கோதுமையின் மரபணு ரகசியங்கள் அம்பலம்!

விளையும் மணிகளின் நிறம், பருமன், நோய் எதிர்ப்புத் திறன் என, கோதுமையின் சகல அம்சங்களையும் அதன் மரபணுக்களே தீர்மானிக்கின்றன.

விளையும் மணிகளின் நிறம், பருமன், நோய் எதிர்ப்புத் திறன் என, கோதுமையின் சகல அம்சங்களையும் அதன் மரபணுக்களே தீர்மானிக்கின்றன.

மொத்தம், 20 நாடுகளைச் சேர்ந்த, 200 பயிரியில் மற்றும் மரபணுவியல் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து இந்த, 'இமாலய சாதனை'யைச் செய்துள்ளதாக, 'சயன்ஸ்' இதழ் அறிவித்துள்ளது. உலக மக்கள் தொகையில், 20 சதவீதம் பேருக்கு தெம்பு தரும் உணவாகவும் கோதுமை திகழ்கிறது.

எனவே, கோதுமையில் உள்ள, 21 குரோமோசோம்களை பிரித்து, 40 லட்சம் மூலக்கூறுக் குறியீடுகளை அடையாளம் கண்டு, ஒரு லட்சம் மரபணுக்களின் இருப்பிடங்களை கண்டறிந்திருப்பது, நிச்சயம் மகத்தான சாதனை தான்.

மரபணுக்களை பகுத்தறிவதால் என்ன பயன்? பாசன வசதியற்ற வயல்களில் பயிர் செய்யக்கூடிய கோதுமையை உருவாக்குவது, அதிக விளைச்சல் தரும் ரகங்களை உருவாக்குவது, பூச்சிகள், நோய்களை எதிர்க்கும் பயிர்களை உருவாக்குவது போன்ற பல வித்தைகளை செய்வதற்கு, கோதுமையின் மரபணு ரகசியங்களை அறிந்து கொள்வது உதவும்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...