தண்ணீர் இருப்பது உறுதி நிலாவில்!

சந்திரனின் இரு துருவப் பகுதிகளிலும் தண்ணீர் இருப்பதற்கு நேரடி ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக, அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான, 'நாசா' அறிவித்துள்ளது.

சந்திரனின் இரு துருவப் பகுதிகளிலும் தண்ணீர் இருப்பதற்கு நேரடி ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக, அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான, 'நாசா' அறிவித்துள்ளது.



பத்து ஆண்டுகளுக்கு முன் இந்திய விண்வெளி அமைப்பான, 'இஸ்ரோ' அனுப்பிய சந்திரயான் - 1 விண்கலன் பல ஆய்வுக் கருவிகளை சுமந்து சென்று, நிலாவை வலம் வந்தது. அதில், நிலாவில் உள்ள தாதுக்களின் வரைபடம் தயாரிப்பதற்காக, 'நாசா' வடிவமைத்த ஒரு கருவியும் ஒன்று.

'எம் - 3' எனப்படும் அந்தக் கருவி, நிலவின் மேற்பரப்பில் ஒளியைச் செலுத்தி, அது பிரதிபலிக்கும் விதத்தை வைத்து, அங்கு உள்ள தாதுக்கள் பற்றிய தகவல்களை சேகரித்தது. அந்த தகவல்களை ஆராய்ந்த, 'நாசா' விஞ்ஞானிகள், பூமியில் இருப்பவர்களின் கண்களுக்குத் தெரியாத, நிலாவின் இரண்டு துருவப் பகுதிகளிலும், பனிக் கட்டி வடிவில் நீர் இருக்கிறது என்பதை அண்மையில் உறுதி செய்துள்ளனர்.

நிலாவில் போதிய நீர்வளம் இருப்பதை உறுதி செய்யப்பட்டால், மனிதர்கள் நிலாவில் அதிக காலம் தங்கி ஆராய்ச்சி செய்ய முடியும் என்றும், மனிதக் குடியிருப்புகளை அமைக்க முடியும் என்றும், நாசா விஞ்ஞானிகள் அண்மையில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...