அம்மோனியாவிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருள்!

மாசில்லாத ஹைட்ரஜன் எரி பொருளை வாகனங்களுக்குப் பயன்படுத்த, உலகெங்கும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

மாசில்லாத ஹைட்ரஜன் எரி பொருளை வாகனங்களுக்குப் பயன்படுத்த, உலகெங்கும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

அண்மையில் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் அம்மோனியாவிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருளை தயாரித்து ஓடும் இரண்டு கார்களை வெற்றிகரமாக வெள்ளோட்டம் பார்த்து உள்ளனர்.

ஹைட்ரஜனை வாகனங்களுக்குப் பயன்படுத்தும்போது, புகை ஏதும் வராது, நீர் துளிகள் மட்டுமே வெளியேறும் என்பதால், ஹைட்ரஜன் எதிர்காலத்தில் மாற்று எரிபொருளாகிவிடும் என, விஞ்ஞானிகள் கணித்து வருகின்றனர்.

ஆனால், அடர்த்தி குறைவான ஹைட்ரஜன் திரவம், எளிதில் தீப்பிடிக்கக்கூடியது. அதை பெட்ரோலைப் போல சாலையோரங்களில் வினியோகிப்பதும் சவாலாக உள்ளது.

பிரிஸ்பேன் நகரில் உள்ள காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கழகம் எனப்படும் சி.எஸ்.ஐ.ஆர்.ஓ., அண்மையில் காற்றிலிருந்து நைட்ரஜனை எடுத்து அம்மோனியாவை உருவாக்கி, பிறகு, அம்மோனியாவிலிருந்து ஹைட்ரஜனை ஒரு உலோக சவ்வு மூலம் பிரித்தெடுக்கும் முறையை உருவாக்கியுள்ளது.

அம்மோனியாவை பல இடங்களுக்கு எடுத்துச் செல்வது எளிது என்பதாலும், உலோக சவ்வு முறையில் வேண்டிய இடத்தில் வைத்து ஹைட்ரஜனை தயாரித்து வினியோகிக்க முடியும் என்பதாலும் இந்தத் தொழில்நுட்பம் ஹைட்ரஜன் எரிபொருள் பரவலை எளிதாக்கும் என, சி.எஸ்.ஐ.ஆர்.ஓ விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்த முறையில் தயாரிக்கப்படும் ஹைட்ரஜன், மிகவும் துாய்மையானதாக இருப்பதாகவும், விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த முறையில் தயாரித்த ஹைட்ரஜனை வைத்துத்தான் அண்மையில் இரண்டு கார்களை ஆஸ்திரேலியர்கள் ஓட்டிப் பார்த்துள்ளனர்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஹைட்ரஜனில் ஓடும் கார்களை ஆஸ்திரேலிய நகர்களில் பார்க்க முடியும் என்றும், ஆசிய நாடுகளில் இதே தொழில்நுட்பத்தை பரப்ப திட்ட மிட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

அம்மோனியாவிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருளை தயாரிக்க அதிக செலவோ, மாசுபாடோ ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...