வயதான செல்களுக்கு இளமை திரும்ப வைக்க முடியுமா?

முதுமையடைந்தவரின் உடலுக்கு மீண்டும் இளமையை வரவழைக்க முடியும் போலத் தெரிகிறது.

முதுமையடைந்தவரின் உடலுக்கு மீண்டும் இளமையை வரவழைக்க முடியும் போலத் தெரிகிறது. 

இங்கிலாந்திலுள்ள எக்செட்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், வயதான மனித செல்களுக்கு ஒரு சிறப்பு வேதிப் பொருளை செலுத்தியபோது, ஆய்வகத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த செல்கள், இளம் செல்களைப் போலவே துடிப்புடன் இயங்க ஆரம்பித்தன.

செல்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் பிரிந்து, பல்கிப் பெருகும் தன்மை கொண்டவை. இதனால்தான், இளம் வயதினருக்கு துடிப்பும், உடல் வளர்ச்சியும் ஏற்படுகிறது. ஆனால் வயது ஆக, ஆக, செல்கள் பிரிந்து, பல்கிப் பெருகும் வேகம் குறைய ஆரம்பிக்கிறது. இதைத்தான் முதுமை என்கிறோம்.

முதியோரின் உடலில் உள்ள செல்கள் பல்கிப் பெருகாவிட்டாலும், சத்துகளை உட்கொண்டு, அப்படியே உயிருடன் இருக்கும். 

இதை 'செல்லுலர் செனசென்ஸ்' என்பர். இத்தகைய நிலையை அடைந்த செல்களுக்கு, எக்செட்டர் விஞ்ஞானிகள், மிகச் சிறிய அளவில் ஹைட்ரஜன் சல்பைடை செலுத்தியபோது, 50 சதவீத செல்கள், இளம் செல்களைப் போலவே துடிப்புடன் செயல்பட ஆரம்பித்தன.

இதனால், இனி முதியவர்களுக்கு இளமையை திரும்பச் செய்துவிட முடியும் என, இப்போதே சொல்லி விட முடியாது என்றும், மேலும் பல விலங்குகள் மீது சோதனை நடத்திய பிறகே, மனிதர்கள் மீது இச் சோதனையை நடத்த முடியும் என, விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...