மணிக்கட்டில் ஒரு ஆய்வுக்கூடம்!

கையில் அணிந்துகொள்ளும் உடல் நல கண்காணிப்புக் கருவியை, ரட்கெர்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

கையில் அணிந்துகொள்ளும் உடல் நல கண்காணிப்புக் கருவியை, ரட்கெர்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். பல புதிய தொழில்நுட்பங்களை தொகுத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த, 'ஸ்மார்ட் பேண்ட்' அணிந்திருப்பவரின் ரத்தத்திலுள்ள செல்களை அளப்பது முதல், அணிந்துள்ளவரைச் சுற்றியுள்ள காற்றில் மாசுக்கள், நச்சுக்களையும் அளக்கும் திறன் கொண்டது.

அதி நவீன நுண்திரவ உணரி, மைக்ரோ கண்ட்ரோலர் மற்றும் புளூடூத் ஆகிய தொழில் நுட்பங்களைக் கொண்டிருக்கும் இந்த புத்திசாலி கைப்பட்டை, அணிந்திருப்பவரின் மொபைல் செயலிக்கு, அளவுகளை அனுப்பிவிடும். அதை மருத்துவரிடம் காட்டினால், அவர் உடல் நலத்தைப் பற்றி துல்லியமாகக் கணிக்க முடியும்.

இந்தக் கருவியை பலவித நோய்களுக்கான அறிகுறிகளை அறியும் விதத்தில், அவற்றுக்குரிய உணரிகளை மாற்றிக்கொள்ள முடியும். எனவே நோயறிதலுக்காக பெரிய ஆய்வகங்கள், மற்றும் அதிக கட்டணம் போன்றவற்றை தவிர்க்க, இந்தக் கருவி உதவும். தற்போது சில மாதிரிகளையே ரட்கெர்ஸ் விஞ்ஞானிகள் உருவாக்கியிருந்தாலும், நம்பிக்கை தரும் கருவி என, 'மைக்ரோசிஸ்டம்ஸ் அண்ட் இன்ஜினியரிங்' இதழ் பாராட்டியுள்ளது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...