கண்ணை காக்கும் மஞ்சள்!

கிளாகோமா எனப்படும் கண் திரவ அழுத்த நோய், பார்வையை பறிக்கக்கூடியது. கண் திரவ அழுத்தத்தை தணிக்க, மஞ்சள் கிழங்கிலுள்ள, 'குர்குமின்' என்ற பொருள் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

கிளாகோமா எனப்படும் கண் திரவ அழுத்த நோய், பார்வையை பறிக்கக்கூடியது. கண் திரவ அழுத்தத்தை தணிக்க, மஞ்சள் கிழங்கிலுள்ள, 'குர்குமின்' என்ற பொருள் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், குர்குமின் எளிதாகக் கரையாது. எனவே, கிளாகோமா நோயாளிக்கு, குர்குமின், நல்ல பலன் தரவேண்டும் என்றால், தினமும், 24 மாத்திரைகள் வரை எடுத்துக் கொள்ளவேண்டி இருக்கும்.

அத்தனை குர்குமின் உடலில் கலந்தால், பக்க விளைவாக, வயிற்றுக் கோளாறுகள் உண்டாகும்.

இதைத் தவிர்க்க, லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லுாரியைச் சேர்ந்த மருத்துவர்கள், குர்குமினை நேரடியாக கண்ணில் விடும் சொட்டு மருந்து வடிவில் தயாரித்து உள்ளனர்.

இது கண் எரிச்சலையோ, வீக்கத்தையோ உண்டாக்காது என்றும், கிளாகோமா உள்ள கண்ணிலேயே கலக்கப்படும்போது, விரைவான முன்னேற்றம் கிடைப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எலி சோதனைகளில் நல்ல பலன் கிடைத்திருப்பதால், விரைவில் மனிதர்களுக்கான கண் சொட்டு மருந்து சோதனையை துவக்கவிருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...