'கருந்துளை' பற்றிய ஐன்ஸ்டீனின் கணக்கு சரி!

அன்றே சொன்னார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அது இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கருந்துளை எனப்படும் காலாவதியான நட்சத்திரம், தன்னைச் சுற்றியுள்ள எதையும் கபளீகரம் செய்யுமளவுக்கு, அசாதாரணமான ஈர்ப்பு சக்தியைக் கொண்டிருக்கும் என்பது ஐன்ஸ்டீனின் கணிப்புகளுள் ஒன்று.

நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் ஒளிகற்றைகளைக் கூட கருந்துளை ஈர்த்துக் கொள்ளும் என்றார் அவர்.

அண்மையில், நமது பால் வீதியின் மத்தியில் உள்ள 'சாஜிட்டாரியஸ்- - ஏ' என்ற கருந்துளை அதைச் செய்து காட்டியிருப்பதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்திஉள்ளனர்.

சாஜிட்டாரியஸ் - ஏ கருந்துளையை சில நட்சத்திரக் கூட்டங்கள் அதிவேகமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒன்றான, 'எஸ் 2' என்ற நட்சத்திரம் சாஜிட்டாரியஸ் - -ஏவை ஒருமுறை வலம் வர, 15 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது.

கடந்த மே, 19 அன்று எஸ் 2 நட்சத்திரம் கருந்துளைக்கு அருகாமையில் கடந்து போனது.

அப்போது அது வெளிவிடும் ஒளியை கருந்துளை அப்படியே ஈர்த்துக் கொண்டதை ஐரோப்பிய விஞ்ஞானிகள் சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள் மூலம் கண்டுள்ளனர். இதனால் ஐன்ஸ்டீனின் கருந்துளை பற்றிய முக்கியமான கணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...