கியூப் விளையாட கற்றுத் தரும் கியூப்

பல வண்ண கன சதுரங்களை வைத்து விளையாடும், 'கியூப்' கண்டுபிடிக்கப்பட்டு, 44 ஆண்டுகள் ஆகியும் அதற்கு மவுசு குறையவில்லை.

பல வண்ண கன சதுரங்களை வைத்து விளையாடும், 'கியூப்' கண்டுபிடிக்கப்பட்டு, 44 ஆண்டுகள் ஆகியும் அதற்கு மவுசு குறையவில்லை. இன்றும் அதற்கான உலக சாம்பியன் போட்டிகள் நடக்கின்றன. இன்றைய தலைமுறையினர், சில நொடிகளில், கலைந்திருக்கும் வண்ணங்களை பக்கத்திற்கு ஒரு வண்ணமாக திருப்பிக் கொண்டு வந்து வெற்றி காண்கிறார்கள்.

இப்போது, போன நுாற்றாண்டு கியூபை, 21ஆம் நுாற்றாண்டுக்கு அழைத்து வர கோ கியூப் என்ற டிஜிட்டல் கியூபை ஒரு பொம்மை தயாரிக்கும் நிறுவனம் அறிவித்துள்ளது. 'கிக்ஸ்டார்டர்' தளத்தில் அதை அறிவித்தவுடனே, பல ஆயிரம் பேர் வாங்கத் தயாராகிவிட்டனர்.

கோ கியூபில், ஒவ்வொரு வண்ண கன சதுரத்துடனும் உணரிகளும், புத்திசாலி மின்னணு அமைப்பும் உள்ளது. இதை ஒரு மொபைல் செயலியுடன் இணைத்திருக்கின்றனர். இதன் மூலம் கியூப் கற்பவர்களுக்கு, அந்த செயலியே அடுத்த நகர்வுகளை சொல்லித் தருகிறது. அடுத்தாண்டு மார்ச் மாதம்தான் வெளிவரும் என்றாலும் பல்லாயிரம்பேர், மூளைக்கு வேலை தரும் கோ கியூபை வாங்கத் தயாராகிவிட்டனர்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...