ஆஸ்துமாவை அறிய எளிய சோதனை!

பஞ்சு வைத்த குச்சியை மூக்கில் ஒற்றி எடுத்து சோதித்தாலே, ஒருவருக்கு ஆஸ்துமா இருக்கிறதா, இல்லையா என்பதை சொல்லிவிட முடியும் என்கின்றனர், அமெரிக்காவிலுள்ள மவுன்ட் சினாய் மருத்துவ அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.

பஞ்சு வைத்த குச்சியை மூக்கில் ஒற்றி எடுத்து சோதித்தாலே, ஒருவருக்கு ஆஸ்துமா இருக்கிறதா, இல்லையா என்பதை சொல்லிவிட முடியும் என்கின்றனர், அமெரிக்காவிலுள்ள மவுன்ட் சினாய் மருத்துவ அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.

ஆஸ்துமா உள்ளோர், ஆஸ்துமாவே இல்லாதோரின் மூக்கில் ஒற்றிய மாதிரிகளை, மவுன்ட் சினாய் மருத்துவ அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சேகரித்தனர்.

அந்த மாதிரிகளை, 'ரிபோ நியூக்ளிக் ஆசிட்' சோதனைக்கு அனுப்பினர். அந்த முடிவுகளை, ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருளிடம் தந்து, இதில் யாருக்கு ஆஸ்துமா உள்ளது என, கண்டறியுமாறு கேட்டனர்.

அந்த மென்பொருள், ஆஸ்துமா உள்ளோரின் மூக்கு திரவ மாதிரிகளில் இருக்கும், 90 விதமான பயோ மார்க்கர்ஸ் எனும் உயிரிக் குறியீடுகளை ஒப்பு நோக்கி, யாருக்கு ஆஸ்துமா இருக்கிறது என்பதை துல்லியமாக சொல்லிவிட்டது.

இந்த எளிமையான மூக்கு சோதனை முறையை, மேலும் பலரிடம் நடத்தி, அதன் துல்லியத்தை உறுதிப்படுத்த, விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.

அதில், அவர்களுக்கு வெற்றி கிடைத்தால், மெல்லிய ஆஸ்துமா இருப்போர் கூட, கடுமையான, பி.டி.எப்., போன்ற சோதனைகளை செய்யாமலேயே, நோய் இருப்பதை கண்டறியலாம்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...