உலகின் மிகப் பெரிய உலோக, '3டி பிரின்டர்'

முப்பரிமாண அச்சுஇயந்திரங்களை குட்டியாக மேஜை மேல் வைத்துப் பார்த்தவர்கள், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, 'டைடோமிக்' (Titomic) உருவாக்கியுள்ள, 3டி பிரின்டரைப் பார்த்தால் அசந்துவிடுவர்.

முப்பரிமாண அச்சுஇயந்திரங்களை குட்டியாக மேஜை மேல் வைத்துப் பார்த்தவர்கள், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, 'டைடோமிக்' (Titomic) உருவாக்கியுள்ள, 3டி பிரின்டரைப் பார்த்தால் அசந்துவிடுவர். சரியாக, 9 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், 1.5 மீட்டர் உயரமும் கொண்ட டைடோமிக், ஒரு பெரிய அறையையே அடைத்துக்கொள்கிறது.

எதற்கு இத்தனை பெரிய, 3டி பிரின்டர்? இது பல வகை உலோகங்கள், அலோகங்களைக் கொண்டு புதிய பொருட்களை உருவாக்குவதற்கென்றே படைக்கப்பட்டது என்கின்றனர், டைடோமிக் அதிகாரிகள்.

இதற்கு முன்பே, உலோகத்தால் புதிய பொருட்களை வடிவமைக்கும் முப்பரிமாண அச்சு இயந்திரங்கள் வந்துவிட்டனவே? ஆம், இருந்தாலும், இது கைனடிக் பியூசன் முறையில் உலோகத் துகளை படலம் படலமாக அடுக்குவதன் மூலம், முப்பரிமாணத்தில் உலோகப் பொருளை தயாரிக்கிறது. 40.5 கன சென்டிமீட்டர் அளவுக்கு உள்ள பெரிய பொருட்களை இந்த இயந்திரத்தில் வைத்து தயாரிக்க முடியும்.

இதனால் இது தான், இன்றைய தேதிக்கு உலகின் மிகப் பெரிய உலோக, 3டி பிரின்டர் என்கிறது டைடோமிக்கின் இணைய தளம்.

டைடோமிக், மணிக்கு, 45 கிலோ வரை உலோகத் துகள்களை ஒன்றன்மேல் ஒன்றாக 'டெபாசிட்' செய்யும் வேகம் கொண்டது. உலோக முப்பரிமாண அச்சு இயந்திரங்களிலேயே இதுதான் மிகவும் வேகமானது, பெரியது என்கிறது டைடோமிக்கின் இணைய தளம்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...