புத்திசாலி கண் கண்ணாடி!

வயது ஆக, ஆக, கண்களின் பார்வைத் துல்லியம் குறைகிறது. இந்தக் குறையை போக்க, கண் கண்ணாடிகள் பெருமளவு உதவினாலும், அவற்றிலும் சிக்கல்கள் உள்ளன.

வயது ஆக, ஆக, கண்களின் பார்வைத் துல்லியம் குறைகிறது. இந்தக் குறையை போக்க, கண் கண்ணாடிகள் பெருமளவு உதவினாலும், அவற்றிலும் சிக்கல்கள் உள்ளன. ஒரே கண்ணாடியில் படிப்பது, கிட்டப் பார்வை, தூரப் பார்வை போன்ற மூன்று வசதிகளையும் கொண்ட, 'புரகிரசிவ்' கண்ணாடிகள்கூட, கண்களுக்கு அசதியைத் தரக்கூடியவைதான்.

இதற்கு தீர்வு கண்டிருக்கிறார் நிதீஷ் பத்மனாபன். அமெரிக்காவிலுள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான இவரும், இவரது குழுவினரும், 'ஆட்டோபோகல்' என்ற புத்திசாலி கண்ணாடியை வடிவமைத்துள்ளனர்.

இந்தக் கண்ணாடியில், கண்கள் பார்க்கும் திசை, துாரம் போன்றவற்றை அளக்கும் உணரிகள் உள்ளன.

அணிபவரின் பார்வைக் குறைபாட்டின் அளவுகளை, இந்தக் கண்ணாடியிலுள்ள சிறிய கணினிக்கு முன்பே தந்துவிட்டால், அந்தக் குறைபாட்டை இட்டுக்கட்டி '20/20' எனப்படும் துல்லியமான பார்வையை ஆட்டோபோகல் கண்ணாடி தந்துவிடுகிறது.

நிதீஷ் வடிவமைத்துள்ள இக் கருவியிலுள்ள ஆடிக்குள் உள்ள திரவத்தை மின் துாண்டல் மூலம் கிட்டப் பார்வை, துாரப்பார்வை போன்றவற்றை வினாடியில் மாற்றிவிட முடிகிறது.

வரும் ஆகஸ்டில் வெள்ளோட்டம் விடப்படவிருக்கும் ஆட்டோபோகல் கண்ணாடியை, ஒருவர் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்த முடியும் என, ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார் நிதீஷ்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...