ரோல்ஸ் ராய்சின் பறக்கும் கார்!

ஜெட் விமானங்களை தயாரித்து வரும் 'ரோல்ஸ் ராய்ஸ்', விரைவில் ஐந்து பேர் பயணிக்கும் வகையில், பறக்கும் காரை தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

ஜெட் விமானங்களை தயாரித்து வரும் 'ரோல்ஸ் ராய்ஸ்', விரைவில் ஐந்து பேர் பயணிக்கும் வகையில், பறக்கும் காரை தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

இந்த காருக்கு ஓடுபாதை தேவையில்லை என்றும், நிற்குமிடத்திலிருந்து செங்குத்தாக கிளம்பி, வானில் பறக்கும் வகையில் இந்த கார் இருக்கும் என்றும், ரோல்ஸ் ராய்ஸ் அண்மையில் அறிவித்தது.

முழுக்க முழுக்க மின் சக்தியால் பறக்கும், அதிக சத்தமில்லாத இந்த காரின் இறக்கைகள், வால் பகுதிகள் உட்பட ஐந்து மின் விசிறிகளை கொண்டிருக்கும். மின்சாரத்தால் பறந்தாலும், இந்த காருக்கு வேண்டிய மின்சாரத்தை, உற்பத்தி செய்து தரப்போவது, வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள எரிவாயு டர்பைன்கள் தான். எனவே, துவக்கத்தில் இந்த கார் மின்சாரம் மற்றும் எரிவாயுவால் இயங்கும், 'ஹைபிரிட்' வாகனமாகவே இருக்கும்.

ஒரு முறை எரிபொருள் நிரப்பினால், 800 கி.மீ., துாரம் செல்லும் ரோல்ஸ் ராய்ஸ் பறக்கும் காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு, 330 கி.மீட்டர். அடுத்த சில ஆண்டுகளில் அறிவியல் கனவாக இருந்த பறக்கும் கார், நிச்சயம் நனவாகிவிடும் என்பதற்கு, ரோல்ஸ் ராய்சின் இந்த புதிய முயற்சி ஒரு உதாரணம்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...