ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவினுள் கைரேகை ஸ்கேனர் கொண்டுவர விவோ திட்டம்.!

தற்சமயம் விவோ நிறுவனம் மற்றும் சினாப்டிக்ஸ் நிறுவனம் புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது, அதன்படி ஸ்மார்ட்போன்களில் உள்ள டிஸ்ப்ளேவினுள் கைரேகை ஸ்கேனர் கொண்டுவரும் திட்டத்தை கூடிய விரைவில் கொண்டுவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ ஸ்மார்ட்போன் நிறுவனம் பொதுவாக செல்பீ கேமராவுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கும், இப்போது பல்வேறு புதிய மென்பொருள் தொழில்நுட்பங்களை கொண்டுவர விவோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.



ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவினுள் கைரேகை ஸ்கேனர் கொண்டுவரும் திட்டத்திற்கு ஜந்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களுடன் பணியாற்றி வருவதாக சினாப்டிக்ஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவினுள் கைரேகை ஸ்கேனர் கொணடுவரும் திட்டம் பொறுத்தவரை, மிகவும் பாதுகாப்பன முறையில் ஸ்மார்டபோனை பயன்படுத்த முடியும். மேலும் 3டி அங்கீகார அம்சங்களை விட மிகச் சிறப்பாக செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது விவோ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கு டிஸ்ப்ளேவில் கைரேகை ஸ்கேனர் கொண்டுவரும் திட்டத்திற்கு சினாப்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த புதிய தொழில்நுட்பம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய தொழில்நுட்பம் பொறுத்தவரை டிஸ்ப்ளேவில் கைரேகை ஸ்கேனர் பட்டனை தொட்டதும் ஸ்மார்ட்போன் அன்லாக் செய்யும்படி வடிவமைக்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தொழில்நுட்பம் கொண்ட கைரேகை ஸ்கேனர் 2018-ம் ஆண்டு துவகத்தில் அறிமுகப்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது, அதன்பின் பல லட்சம் ஸ்மார்ட்போன்களுக்கு இந்த புதிய தொழில்நுட்பம் வழங்கப்படும் என சினாப்டிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன் வல்லுநரான பேட்ரிக் மூர்ஹெட் வெளியிட்ட தகவல்களில் சினாப்டிக்ஸ் மற்றும் விவோ கொண்டுவரும் இந்த டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் அம்சம் க்ளியர் ஐடி என அழைக்கப்பட வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...