டிசம்பர் 11ல் வெளியாகிறது கூகுள் ஹோம் மேக்ஸ்

கூகுள் நிறுவனத்தின் நவீன வசதிகள் கொண்ட கூகுள் ஹோம் மேக்ஸ் ஸ்பீக்கர் டிசம்பர் 11ஆம் தேதி வெளியாகிறது.

கூகுள் நிறுவனம் புதிய வகை கேட்ஜெட்டுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூகுள் ஹோம் மேக்ஸ் ஸ்பீக்கரை வரும் டிசம்பர் 11ஆம் தேதி வெளியிடுகிறது. கடந்த மாதம் இதுகுறித்து அறிவிப்புகளை கூகுள் நிறுவனம் வெளியிட்டது. ஆனால் வெளியிடப்படும் தேதி குறித்து கூறப்படவில்லை. இந்நிலையில் வெளியீட்டு தேதியை கூகுள் உறுதிசெய்துள்ளது.

அதன்படி கூகுள் மேக்ஸ் ஸ்பீக்கரின் விலை சுமார் ரூ.26,000 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது 4.5 இன்ச் உஃபர்களுடன் 0.7 இன்ச் ட்வீடெர்களை கொண்டாதாகும். இதன் சத்தம் கூகுள் ஹோம்ஸை விட இருபது மடங்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ப்ளூடுத், 3.5 எம்எம் ஆக்ஸ்லரி ஜாக்கும் வழங்கப்படுகிறது. இது கறுப்பு சாம்பல் மற்றும் சுண்ணாம்பு வண்ணங்களில் வெளியாகிறது. இதனுடன் வெளியாகும் கூகுள் ஹோம் மினி ஸ்பீக்கர் சலுகையுடன் சுமார் ரூ.1,200 விலைக்கு விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...