மலிவு விலையில் ஐபேட் வெளியிட ஆப்பிள் திட்டம்.!

ஆப்பிள் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி ஆப்பிள் சாதனங்களில் பல மென்பொருள்.

தொழில்நுட்பங்கள் இப்போது இடம்பெற்றுள்ளது. மேலும் சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் எக்ஸ் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தும் மற்றோரு ஆப்பிள் சாதனத்திற்கும் விலை குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு 9.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பை கொண்ட ஐபேட் சாதனம் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த சாதனத்தை குறைந்த விலையில் அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவன டேப்லெட் சந்தையில் சரிவு ஏற்ப்பட்டுள்ளது, இதை தொடர்ந்து பல்வேறு ஆப்பிள் சாதனங்கள் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ், ஐபோன் எஸ், ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பை அறிவித்துள்ளது ஆப்பிள் நிறுவனம், மேலும் ஐபோன் எக்ஸ் ஸ்டாக் இருக்கும் வரை வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின் பழைய ஐபோன்களை எக்சேஞ்ச் செய்து ரூ.9,500வரை தள்ளுபடி பெற முடியும், மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகளை கொண்டு வாங்கும் போது வட்டியில்லா மாத தவணை முறை வசதியை பெற முடியும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...