சாம்சங் கேலக்ஸி A (2018) இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தகவல்

சாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனான கேலக்ஸி A (2018) ஸ்மார்ட்போன்களுக்கு 18:9 இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

சாம்சங் கேலக்ஸி A (2018) ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டாலும், இது வளைந்திருக்காது என கூறப்படுகிறது. அந்த வகையில் இதன் டிஸ்ப்ளே பார்க்க கேலக்ஸி S8 ஆக்டிவ் போன்று இருக்கும் என சாம் மொபைல் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய கேலக்ஸி A ஸ்மார்ட்போன்களில் 16:9 டிஸ்ப்ளே வழங்கப்பட்டு வந்த நிலையில், 2018 மாடல்களில் மிகப்பெரும் அப்கிரேடு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட மற்றும் அகலமான டிஸ்ப்ளே வழங்கும் வழக்கத்தை சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S8 மற்றும் S8 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் வழங்கியது குறிப்பிடத்தக்கது.



சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனிலும் இதே அளவு ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டது. கேலக்ஸி A (2018) ஸ்மார்ட்போன் தற்சமயம் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளத்துடன் சோதனை செய்யப்படுகிறது என சாம் மொபைல் தெரிவித்துள்ளது. 

புதிய கேலக்ஸி A ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சாம்சங் கேலக்ஸி A7 (2018) ஸ்மார்ச்போன் கீக்பென்ச் தளத்தில் கசிந்தது. இதில் ஸ்மார்ட்போனின் பெரும்பாலான தகவல்கள் தெரியவந்துள்ளது. 



அதன்படி சாம்சங் கேலக்ஸி A7 (2018) ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஃபுல் எச்டி + இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ், 2.1 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் எக்சைனோஸ் பிராசஸர், 4 ஜிபி அல்லது 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம், 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 16 எம்பி செல்ஃபி கேமரா உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

மற்ற அம்சங்களை பொருத்த வரை IP68 சான்று பெற்ற கைரேகை ஸ்கேனர், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...