வாட்ஸ் அப்பில் செய்திகளை அழிக்கும் வசதி அறிமுகம்

குழுக்கள் அல்லது தனிநபர்களுக்கு அனுப்பிய செய்திகளை நீக்க பயனர்களை அனுமதிக்கும் புதிய அம்சத்தை வாட்ஸ் அப் கொண்டுவந்துள்ளது.

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும் பெரும்பாலும் பயன்படுத்தும் செயலி ‘வாட்ஸ் அப்’ . தகவல்களை எழுத்துகள், படங்கள், வீடியோ மூலம் உறவினர்களுக்கு அனுப்புவதற்கு இந்த செயலி பெரிதும் பயன்படுகிறது. பயனீட்டாளர்களின் கோரிக்கையை ஏற்று, வாட்ஸ் அப் தன்னை மேம்படுத்தி வருகிறது. இந்த ஆப் மூலம் நாம் பிறருக்கு அனுப்பும் தகவல்களை அழிக்க இயலாது என்பதால் அது போன்ற வசதியை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கைகள் குவிந்த வண்ணம் இருந்தது. தகவல்களை குழுக்கள் அல்லது தனிநபர்களுக்கு தவறுதலாக அனுப்பிவிட்டால் அதனை அழிக்கும் வசதி, வாட்ஸ் அப்பில் இல்லாததால் பயனீட்டாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக தெரிவித்திருந்தனர். 

இதனை கருத்தில் கொண்டு வாட்ஸ் ஆப் தற்போது  தகவல்களை அழிக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது பயனீட்டாளர்கள் தாங்கள் அனுப்பிய தகவல்களை 7 நிமிடங்களுக்குள் அழித்து விட வேண்டும். அதற்கு மேல் காலம் எடுத்துக் கொண்டால் அழிக்க முடியாது.இது பயனீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதனை மிகவும் எளிய முறையில் செய்யலாம். அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ் ஆப்பில் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்த முடியும். 

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...