மடிக்கும் வசதி கொண்ட மொபைல் விரைவில் விற்பனைக்கு...

தொழில்நுட்ப‌ சந்தையில் சோதனை முயற்சியில் இருந்த மடிக்‌கும் வசதியுடன் கூடிய மொபல்ஃபோனை, சாம்சங் நிறுவனம் ‌விற்பனைக்கு கொண்டுவர இருக்கிறது.

மொபைல் ஃபோன்கள் என்பது மக்களின் அத்யாவசிய தேவையாகிவிட்டது. அவற்றை மக்கள் விரும்பும்வகையில் வடிவமைப்பதில், பல்வேறு மொபைல் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இதில் புதிய ரகமாக மக்கள் வசதிக்கேற்ப மடித்துவைத்துக்கொள்ளும் செல்போன்களை தயாரிக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. அப்படி மடித்து வைத்துக்கொள்ளக்கூடிய ஃபோல்டிங் மொபைல் ஃபோனை சாம்சங் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. 

இந்த ஃபோல்டிங் மொபைல் ஃபோன் குறித்த அறிவிப்பு ஒன்றை, சாம்சங் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியிட்டது. தற்போது அந்த மொபைல் ஃபோனை விற்பனைக்கு கொண்டு வரும் முயற்சியில் சாம்சங் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஃபோன் 7 இஞ்ச் அளவிலான தொடு திரையோடு வடிவமைக்கப்பட்டிருக்கலாம் எனவும், மடித்து வைக்கும் பொழுது அதன் அளவு கையடக்க அளவில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. 

கீழே விழும்பொழுது மொபைல்ஃபோன் உடைவதற்கான முக்கிய காரணம் அது வளையும் தன்மையோடு இல்லாததுதான் என்றும் அதற்கு மாற்றாகத்தான் இத்தைகைய ஃபோல்டிங் மொபைல்ஃபோனை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. விரைவில் வெளியாகவிருக்கும் இந்த ஃபோல்டிங் மொபைல், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...