வருகிறது இன்டெல் 8-வது தலைமுறை செயலிகள்!

"இன்டெல் கோர்" டெஸ்க்டாப் செயலி குடும்பத்தின் 8-வது தலைமுறை செயலிகளை வரும் அக்., 5-ஆம் தேதி வெளியீடுவதாக அறிவித்துள்ளது. 

இந்த செயலியானது கனிணி பயனாளர்களின் கனரக பணிகளுக்கும், கனிணி விளையாட்டு ஆர்வளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகியினில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த வரவினில் "இன்டெல் கோர் i5", "இன்டெல் கோர் i3" மற்றும் "இன்டெல் கோர் i7-8700K" என மூண்று செயலிகள் வெளியாக உள்ளது

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்:-

1) "இன்டெல் கோர் i7-8700K" என்பது இன்டெல் நிறுவனத்தின் மிகச்சிறந்த கேமிங் டெஸ்க்டாப் செயலியாக வெளியாகிறது.

2) முந்தைய தலைமுறை செயலிகளுடன் ஒப்பிடுகையில், இந்து புதுவரவு செயலிகள் பொருத்தப்பட்ட கனிணிகளில் 32 சதவீத அதிக வேகத்துடனும், 4K 360 டிகிரி திறனுடன் வீடியோக்களைத் படத்தொகுப்பு செய்ய இயலும்.

3) இன்டெல் 8-வது தலைமுறை செயலிகள் ஆனது இன்டெல் K தலைமுறை செயலிகளை மிஞ்சும் வகையினில் பல அம்சங்களுடன் வெளிவருகின்றது.

4) நொடிக்கு 8,400 மில்லியன் தகவல் பரிமாற்றத் திறன், நிகழ்நேர நினைவக மறைநிலை கட்டுப்பாடு, நீட்டிக்கப்பட்ட PLL டிரிம் கட்டுப்பாடுகள், மேம்பட்ட பொதி மின் விநியோகம் மற்றும் மேம்படுத்தப்பட்ட " ட்யூனிங் யுடிலிட்டி, எக்ஸ்ட்ரீம் மெமரி ப்ராஜெக்ட் " போன்ற சிறப்பம்சங்களுடன் இத்தலைமுறை செயலிகள் வெளிவருகின்றன.

5) இன்டெல் "Z370" சிப்செட்-அடிப்படையிலான மதர்போர்டுகளை ஆதரிக்கும் வகையினில் இந்த புதிய சிப்செட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...