மனித டிஎன்ஏவிலிருந்து உருவாக்கப்படும் ரோபோக்கள்

மனித வாழ்வில் அனேகமான செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் ரோபோட்டிக் தொழில் நுட்பம் மருத்துவத்துறையிலும் கால் பதித்துள்ளது. இன்று மருத்துவத்துறையில் பல நுண்ணிய அறுவை சிகிச்சைகளில் நானோ ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

இந்நிலையில் ஜர்னல் சயின்ஸ் வெளியிடப்பட்ட ஆய்வில், கலிஃபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆராய்ச்சியாளர்கள், மனித உடலில் உள்ள டிஎன்ஏவை பயன்படுத்தி மிக நுண்ணிய மைக்ரோ ரோபோக்களை வடிவமைத்து வருவதாக தெரிவித்துள்ளது. இந்த ரோபோக்களில் நானோ டிவைஸ் பொருத்தப்படுகிறது. இதன் மூலம் இந்த ரோபோக்கள் ரத்த நாளங்களில் மருந்துகளை பரிமாற்றம் செய்வதற்காக பயன்படுத்தப்படவுள்ளன. இதய நோய், பக்கவாதம் போன்ற நோய்களுக்கு மருந்துகளை செலுத்த இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ரோபோக்களும் 53 நியூக்கிளியோரைட்டுக்களைக் கொண்ட தனியான டிஎன்ஏவினால் உருவாக்கப்படுகிறது. டிஎன்ஏ நியூக்ளியோடைட்ஸ் அடினீன் (ஏ), தைம் (டி), சைட்டோசின் (சி) மற்றும் குவானைன் (ஜி) ஆகியவற்றை உருவாக்குகிறது. மனித உடல்களில் ஊடுருவி செல்லும் இந்த டிஎன்ஏ ரோபோக்களை நாம் பார்க்க முடியாது. 

இதுபோன்ற டிஎன்ஏ ரோபோக்கள் இதற்கு முன்பே கண்டறியபட்டது. ஆனால் மருத்துவ துறையில் பெரிதாக அந்த ரோபோக்கள் பயன்படவில்லை என்பது குறிப்பிடதக்கது. 

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...