ஃபேஸ்புக் மூலம் ஷாப்பிங் செய்யும் வசதி

ஃபேஸ்புக் பதிவுகளை பார்த்து கொண்டிருக்கும் போதே ஷாப்பிங் செய்யும் புது வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 200 கோடி பயனாளர்களை கவர்ந்துள்ள ஃபேஸ்புக், தனது வாடிக்கையாளர்களுக்கு புதுப்புது வசதிகளை அப்டேட் செய்து கொண்டே வருகிறது. வயது வித்தியாசமின்றி அனைவரையும் தன் வசம் ஈர்த்துள்ள ஃபேஸ்புக்கை பயன்படுத்துபவர்கள் இந்தியாவில்தான் மிக அதிகம் என்கிறது சமீபத்திய புள்ளிவிவரங்கள்.

இந்நிலையில் ஃபேஸ்புக் ‘மார்க்கெட் ப்ளேஸ்’ எனும் புதிய சேவையை தொடங்கியுள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் பொருட்களை வாங்கவோ அல்லது விற்பனை செய்யவோ முடியும். இச்சேவை ஏற்கனவே அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட ஏழு நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த சேவை விரிவுபடுத்தப்படுகிறது. அதாவது தற்போது 17 ஐரோப்பிய நாடுகளில் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.

பொருட்களை வாங்குவதற்கு முன் விற்பனையாளரின் சுயவிவரங்களை ஃபேஸ்புக் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதனால் ஆன்லைன் மோசடி தடுக்கப்படும் என கூறப்படுகிறது. அமெரிக்காவில் மே மாதத்தில் மட்டும் 18 மில்லியன் பொருட்கள் ஃபேஸ்புக் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...